தான்சானியா நாட்டில் துயரம் பஸ் ஆற்றுக்குள் கவிழ்ந்து 56 பேர் பலி

Read Time:1 Minute, 29 Second

Tansania.jpgதான்சானியா நாட்டில் பஸ் ஒன்று ஆற்றுக்குள் கவிழ்ந்ததில் 56 பேர் பலியான துயர சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவம் பற்றி கூறப்படுவதாவது. தான்சானியா நாட்டிலுள்ள மாலரெனி என்ற இடத்திலிருந்து அருசா என்ற இடத்துக்கு பஸ் ஒன்று போய்க்கொண்டிருந்தது. பஸ்ஸில் அளவுக்கு அதிகமாக பயணிகள் இருந்தனர். பஸ் பாலம் ஒன்றை கடக்க முயன்றபொழுது அதிக எடையால் பஸ் கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறி ஆற்றுக்குள் கவிழ்ந்தது. இந்த விபத்தில் பெண்கள் குழந்தைகள் உள்பட 56 பேர் பலியானார்கள்.

இந்த பஸ்ஸில் 26 பேர் மட்டுமே இருக்க இருக்கை வசதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் பஸ்ஸில் 74 பயணிகள் இருந்தனர். வடக்கு தான்சானியாவில் நடந்த இந்த துயர சம்பவம் மக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. இதே பகுதியில் கடந்த வாரம் வேன் ஒன்று விபத்துக்குள்ளானதில் 28 பேர் பலியான சம்பவம் நடந்தது. இரண்டே வாரத்துக்குள் இந்த பகுதியில் விபத்துகளால் இறந்தவர்களின் எண்ணிக்கை 84 ஆக உயர்ந்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் ஒரே பிரசவத்தில் 4 பெண்குழந்தைகள்
Next post இலங்கை அரசு_புலிகள் பேச்சு தோல்வி: சமரசத்திலிருந்து விலகுவது குறித்து நார்வே பரிசீலனை