அலஸ்தோட்டம் பகுதியில் மஜாச் நிலையம் என்ற போர்வையில் இங்கிய விபசார விடுதி
திருகோணமலைஇ அலஸ்தோட்டம் பகுதியில் மஜாச் நிலையம் என்ற போர்வையில் இங்கிய விபசார விடுதி இன்றுகாலை பிரதேச மக்களினால் முற்றுகையிடப்பட்டுள்ளது.
இதன்போது குறித்த நிலையத்தின் முகாமையாளர் மற்றும் அங்கு வந்திருந்த வாடிக்கையார் ஒருவர் ஆகியோர் மக்களால் நையப்புடைக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இதன்போது அங்கிருந்த இரு யூவதிகள் விசாரணைக்காக பொலிஸார் அழைத்துச் சென்றனர். இதேவேளைஇ அங்கு மயங்கிய நிலையில் இருந்த மற்றொரு யூவதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணகைளை உப்புவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
சுற்றுலா பயணிகளை கவர்வதற்காக இப் பிரதேசத்திலுள்ள பல வீடுகள் விடுதிகளாக மாற்றப்பட்டு வருகின்றன. இவற்றில் வெளியூர் சுற்றுலா பிரயாணிகளை விட பெருமளவில் உள்ளுhர் வாசிகளே தங்கி வருவதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.