புலிகளிடம் பணம் பெற்றவர்களே சனல் 4வுக்கு சாட்சியம் வழங்கினர் -நெஷ்பி பிரபு

Read Time:4 Minute, 23 Second

chanel4Mac-and-MRபிரிட்டனின் சனல் 4 தொலைக்காட்சி சேவை தயாரித்த யுத்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பான விவரணப் படத்தில் சாட்சியம் அளித்தவர்கள் அனைவருமே எல்.ரி.ரி.ஈ இயக்கத்தின் பணம் வாங்கும் உறுப்பினர்கள் என்று பிரிட்டிஷ் கன்சவேர்டிவ் கட்சியைச் சேர்ந்த பிரபுக்கள் சபை உறுப்பினரான நெஷ்பி பிரபு அறிவித்துள்ளார்.

பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கெமருன் வாக்குறுதி அளித்தமைக்கு அமைய இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக் குற்றச்சாட்டுகள் குறித்து ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் சுயாதீன விசாரணை ஒன்றை நடத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்குவேன் என்று அளித்த கோரிக்கையை பிரிட்டிஷ் அரசாங்கம் நிறைவேற்ற தவறிவிட்டது என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

பிரிட்டிஷ் அரசாங்கம் ஏன் ஏற்கனவே ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை மீது தனது செல்வாக்கை பிரயோகிக்க எத்தனிக்கிறது என்று கேள்வி எழுப்பிய நெஷ்பி பிரபு, பிரிட்டிஷ் பிரதமர் இலங்கை அரசாங்கத்துக்கு எதிர்வரும் மார்ச் மாதம் வரையில் யுத்தக் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை செய்வதற்கு இடமளிக்க வேண்டும் என்று கடந்த நவம்பர் மாதத்தில் அறிவித்த போதிலும், இப்போது அக்கோரிக்கைக்கு மாறாக நடந்து கொள்கிறார் என்று கண்டனம் தெரிவிக்கிறார்.

26 வருட கால சிவில் யுத்தத்தின் இறுதி நாட்களில் இடம்பெற்ற நிகழ்வுகள் பற்றி கொழும்பில் உள்ள பிரிட்டிஷ் தூதரகத்தின் இராணுவப் பிரிவுக்கு பொறுப்பான இராஜதந்திரி வெளியிட்ட பிரசுரம் தங்களுக்கு கொடுக்கப்பட வேண்டும் என்று பிரபுக்கள் சபையில் இம்மாதம் 26ம் திகதியன்று நெஷ்பி கேள்வி எழுப்பியமை குறிப்பிடத்தக்கது.

பிரிட்டனின் வெளிவிவகார காரியாலயத்துக்குப் பொறுப்பான அமைச்சர் வர்ஷி சீமாட்டி 1983ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரையில் இடம்பெற்ற யுத்தம் தொடர்பான பல புதிய யுத்த தகவல்கள் தங்களுக்கு கிடைத்திருப்பதாக பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.

ஆயினும் வர்ஷி சீமாட்டியார் ஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் சமர்ப்பிக்கப்படுவது ஒரு சரியான தீர்மானம் என்று தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கம் குறிப்பிட்ட காலப்பகுதியில் இந்த விசாரணைகளை யதார்த்தபூர்வமாக நடத்தியிருக்கிறதா என்பதை நாம் அவதானிப்பது அவசியம் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதுபற்றி தகவல் தெரிவித்த தொழில்கட்சியின் பேச்சாளரான பாச் பிரபு அரசாங்கத்தின் அணுகுமுறையை எதிர்க்கட்சி ஆதரிக்கிறது என்று தெரிவித்து பிரதமர் தன்னுடைய உறுதி மொழியைக் காப்பாற்றக்கூடிய முறையில் செயற்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதேவேளையில் லிபரல் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த அவபரி பிரவு ஐந்தாண்டு காலத்தில் எத்தகைய உருப்படியான செயலும் இடம்பெறவில்லை என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மேலுமொரு மனித புதைகுழி; மூங்கிலாற்றில் 9 எலும்புக் கூடுகள் மீட்பு
Next post 36 வயது குறைந்த நடிகையுடன், மம்முட்டி ஜோடி போட எதிர்ப்பு