மாணவன் மொபைல் போனில் எடுத்த படங்களில், உலகபோரில் மரணம் அடைந்த வீரரின் உருவம்

Read Time:2 Minute, 7 Second

201406241059465474_British-boy-captures-ghostly-image-of-a-Scottish-regiment_SECVPFபிரிட்டனில் உள்ள ஒரு பள்ளி, பிரான்ஸ் நாட்டிற்கு கல்விச்சுற்றுலா சென்றது. பிரான்ஸில் ஜெர்மனியுடன் நடந்த போரின்போது கொல்லப்பட்ட வீரர்கள் அடங்கிய கல்லறையை பார்க்க மாணவர்கள் அனைவரும் நேற்று சென்றனர்.

இந்த கல்லறை பிரான்ஸ் நாட்டில் அர்ரஸ் என்ற பகுதியில் உள்ளது. இந்த கல்லறையின் பெயர் நெவில்லி செயிண்ட் வாஸ்ட் வார் செமிட்ட்ரி என்பதாகும்.

பல மாணவர்கள் அந்த கல்லறையில் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். மிட்ச் குளோவர் என்ற 14 வயது மாணவனும் மற்ற மாணவர்களுடன் இணைந்து தனது மொபைல்போனில் பல புகைப்படங்கள் எடுத்தாரன்.

சுற்றுலா முடிந்து வீட்டிற்கு வந்ததும் தான் எடுத்த புகைப்படங்கள் ஒவ்வொன்றையும் எடுத்து பார்த்தபோது, அதில் மூன்று படங்கள் மட்டும் கருப்பு வெள்ளையாக இருந்தது. அதுமட்டுமின்றி அந்த புகைப்படத்தில் நிழல் உருவத்தில் ஒருவர் நிற்பது போன்றும் தெரிந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவர் தனது பெற்றோரிடமும், வகுப்பு மாணவர்களிடமும் அந்த புகைப்படத்தை பிரிண்ட் எடுத்து காண்பித்தார்.

இதை பார்த்த அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து மாணவனின் பள்ளி ஆசிரியர் கூறும்போது,

அந்த கல்லறையில் புதைக்கப்பட்டிருந்த இரண்டாம் உலகப்போரில் கலந்துகொண்ட வீரர் ஒருவரின் பேயாக இது இருக்கலாம் என்று கூறியுள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post லிங்கா பட ஷூட்டிங்; ரஜினிக்கு டாக்டர்கள் எச்சரிக்கை
Next post நைஜீரிய சிறுமிகளின் விடுதலைக்காக, கன்னித்தன்மையை வழங்கும் பொப்பிசை பாடகி!