எபோலாவுக்கான புதிய தடுப்பு மருந்து: விரைவில் மனிதர்களிடம் சோதிக்கிறது சீனா!!

Read Time:1 Minute, 50 Second

66092550-a8a3-4f6b-bfac-423752f17daf_S_secvpfமேற்கு ஆப்பிரிக்க நாடுகளான லைபிரியா, கினியா, சியாரா லியோன் ஆகியவற்றில் 7000-க்கும் மேற்பட்ட மனித உயிர்களைக் காவு வாங்கிய எபோலா வைரஸ் உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் கொடிய எபோலா வைரஸ் பரவுவதை தடுப்பதற்கான தடுப்பு மருந்தை சீனா கண்டுபிடித்துள்ளது. இந்த புதிய தடுப்பு மருந்தை இம்மாத இறுதியில் மனிதர்களுக்கு செலுத்தி சோதனை செய்ய உள்ளது சீனா. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அந்நாட்டுப் பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர் யாங் யுஜுன் ”சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் தலைசிறந்த ஆராய்ச்சி அலகுகளில் ஒன்றான இராணுவ மருத்துவ அறிவியல் அகாடமியால் இந்த தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கமும் ராணுவ அதிகாரிகளும் சமீபத்தில் இந்த தடுப்பு மருந்துக்கு அனுமதி அளித்துள்ளதால் இந்த மாதத்தில் இதற்கான மருத்துவ சோதனைகள் தொடங்கும்” என்றார். எபோலா தடுப்பு மருந்து மருத்துவ சோதனைக்கு உட்படுத்தும் உலகின் மூன்றாவது நாடு சீனா என்பதும், இது உலகின் முதல் மரபணு மாற்றம் செய்யப்பட்ட எபோலா தடுப்பு மருந்து என்பதும் குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கபிஸ்தலம் அருகே லாரி டிரைவருக்கு அரிவாள் வெட்டு: மாமனார்–மைத்துனர் கைது!!
Next post சின்னசேலம் அருகே பெண் கற்பழித்து கொல்லப்பட்டாரா?: போலீசார் விசாரணை!!