மஹிந்த ராஜபக்ஷவை விட்டு வரும்போது, கவலையாக இருந்தது.. அதனை உணர்ந்தேன், அதனால் தான் சொல்லாமல் வந்தேன்.. (டாக்டர் ராஜித்த சேனா­ரத்ன வழங்­கிய செவ்வி)!!

Read Time:24 Minute, 46 Second

timthumb (1)தேசிய பிரச்­சி­னைக்கு தீர்­வாக 13 ஆவது திருத்தச் சட்­டத்­துக்கு அமை­வாக அதனை அடிப்­ப­டை­யாகக் கொண்டு அதி­கா­ரத்தை பகிரும் தீர்வு ஒன்­றுக்கு செல்வோம்.

முதலில் நாட்டில் ஜன­நா­யக விட­யங்­களை நிலை­நாட்­டி­விட்டு பின்னர் இதனை செய்வோம். 13 ஆம் திருத்­தத்­துக்கு குறைந்த தீர்­வுக்கு போக­ மாட்டோம் என்று புதிய அர­சாங்­கத்தின் சுகா­தார அமைச்சரும், அமைச்சரவைப் பேச்சாளருமான டாக்டர் ராஜித்த சேனா­ரத்ன தெரி­வித்தார்.

கடந்த அர­சாங்­கத்­தை­ விட்டு வில­கி­யதை பாரிய ஆபத்­தான முடி­வாக கரு­தினோம். ஆனால் நம்­பிக்கை இருந்­தது. எனினும் அந்த நம்­பிக்கை தேர்தல் முடி­வு­களில் பிர­தி­ப­லிக்­குமா? என்ற நம்­பிக்­கை­யின்­மையும் இருந்­தது.

ஆனால் அதனை செய்­ய­வேண்­டிய தேவை இருந்­தது. பிர­சாரக் காலத்தில் நாங்கள் பயப்­ப­ட­வில்லை. வெளி­யே­றும்­ போதும் பயப்­ப­ட­வில்லை என்றும் அவர் குறிப்­பிட்டார்.

அவர் வழங்­கிய விசேட செவ்­வி­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். செவ்­வியின் முழு விபரம் வரு­மாறு,…

கேள்வி: கடந்த ஜனா­தி­பதி தேர்­தலில் மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் வெற்­றி­யா­னது நாட்­டுக்கு கூறும் செய்தி என்ன?

பதில்: நாட்டில் மாற்றம் ஒன்று தேவை என்ற செய்­தியே வெளிக்­காட்­டப்­பட்­டுள்­ளது. அதன்­படி மாற்றம் பெற்­றுக்­கொள்­ளப்­பட்­டுள்­ளது. இது ஒரு நப­ரையோ அல்­லது அர­சாங்­கத்­தையோ மாற்­று­வ­தையும் தாண்டி அர­சியல் கலா­சாரம் பண்­பாடு என்­பவை மாற்­றப்­பட்­டுள்­ளது.

கேள்வி: இந்தத் தேர்­தலில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்­களின் வாக்­குகள் எவ்­வா­றான வகி­பா­கத்தை வகித்­த­தாக நீ்ங்கள் உணர்­கின்­றீர்கள்?

பதில்: தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் இந்த மாற்­றத்தில் மிகவும் உச்­ச­பட்­ச­மாக இடம்­பெற்­றுள்­ளனர். காரணம் கடந்த அர­சாங்கம் இந்த மக்­களை ஒதுக்கி அர­சியல் பேராசை கார­ண­மாக இன­வாதம் மற்றும் மத­வா­தத்தை பரப்பி அர­சியல் செய்­தது. அத­னால்தான் இந்த மக்கள் பாரி­ய­ளவில் முன்­வந்து மாற்­றத்­துக்கு துணை­போ­யுள்­ளனர்.

கேள்வி: அதா­வது இந்த மக்கள் தீர்க்­க­மான பங்­க­ளிப்பை செய்­துள்­ளனர் என்று கூறு­கின்­றீர்­களா?

பதில்: ஆம். தேர்தல் முடி­வு­களை பார்க்­கும்­போது இதனை உணர்ந்­து­கொள்ள முடி­கின்­றது.

கேள்வி: தமிழ் பேசும் மக்­களின் வாக்­கு­க­ளினால் தான் இந்த வெற்­றி­ கி­டைத்­துள்­ள­தாக சில தரப்­புக்கள் செய்­கின்ற பிர­சா­ரங்கள் ?

பதில்: தமிழ் பேசும் மக்கள் கடந்த 2010 ஆம் ஆண்டு ஜனா­தி­பதி தேர்­த­லிலும் இவ்­வா­றுதான் செயற்­பட்­டனர். கடந்த 2010 ஆம் ஆண்டுத் தேர்­தலில் வடக்கு, கிழக்கு மக்கள் சரத் பொன்­சே­கா­வுக்கு வாக்­க­ளித்­தனர்.

எனினும் அவ­ரினால் வெற்­றி­பெற முடி­ய­வில்லை. அதி­லி­ருந்து அந்த வாக்­கு­க­ளினால் மட்டும் ஜனா­தி­பதி தேர்தல் ஒன்றில் வெற்­றி­பெற முடி­யாது என்ற விடயம் தெளி­வா­கின்­றது. தெற்கில் உள்ள சிங்­கள மக்கள் அதிகம் வாழும் பகு­தி­க­ளையும் வெற்­றி­பெற முடிந்­த­தா­லேயே ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வினால் வெற்­றி­பெற முடிந்­தது.

கேள்வி: கடந்த காலங்­களில் நீங்கள் தமிழ் மக்­களின் அபி­மானம் குறித்து பேசி­னீர்கள். உங்கள் கொள்­கையில் மாற்றம் ஏற்பட­வில்லை. தற்­போது அதி­கா­ரத்­துக்கு வந்­துள்­ளீர்கள். என்ன செய்­யப்­ போ­கின்­றீர்கள்?

பதில்: தற்­போது அதனை எம்மால் இல­கு­வாக செய்ய முடியும். தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பும் எம்­முடன் அமர்ந்­துள்­ளதால் அது இல­கு­வாக அமைந்­துள்­ளது. தீர்­மானம் எடுக்கும் செயற்­பாட்டில் நிறை­வேற்று சபையில் அவர்­களும் எம்­முடன் உள்­ளனர். எதிர்­கா­லத்தில் அனை­வரும் இணைந்து பிரச்­சி­னை­களை தீர்த்­துக்­ கொள்ள முடியும். கட்டம் கட்­ட­மாக முன்­செல்வோம்.

கேள்வி: 100 நாள் திட்டம் தற்­போது எவ்­வாறு செயற்­ப­டு­கின்­றது?

பதில்: 100 நாள் வேலைத்­திட்டம் உரிய முறையில் இடம்­பெற்­று­ வ­ரு­கின்­றது.

கேள்வி: 100 நாட்­களின் பின்னர் இந்த நாட்டில் பாரிய மாற்­றத்தை பார்க்க முடி­யுமா?

பதில்: நிச்­சய மாக பார்க்க முடியும். அனைத்து விட­யங்­களும் அதில் இல்­லா­வி­டினும் அதற்கு அப்பால் செல்­கின்ற வகையில் செயற்­ப­டுவோம். எனினும் 100 நாட்­களின் பின்னர் பாரிய மாற்­றத்தை நாட்டில் காண்போம்.

கேள்வி: நவம்பர் மாதம் 21 ஆம் திகதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுடன் நீங்கள் அர­சாங்­கத்­தை­விட்டு வெளியேறினீர்கள்.

பின்னர் பல தரப்­புக்­களை இணைத்­துக்­கொண்­டு­வெற்­றி­ய­டைந்­து­விட்­டீர்கள். எனினும் பின்னர் சுதந்­திரக் கட்­சியின் தலை­வ­ராக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன வந்­துள்ளார். அது ஐக்­கிய தேசிய கட்­சிக்கு தயக்­கத்தைக் கொடுத்தி­ருக்­குமே?

பதில்: இல்லை. தற்­போது அர­சாங்­கத்தின் செயற்­பா­டு­களை முன்­கொண்டு செல்ல இல­கு­வா­கி­யுள்­ளது. ஜனா­தி­பதி தேர்­தலில் நாங்கள் வெற்றி­பெற்­றாலும் பாரா­ளு­மன்றத்தில் பெரும்­பான்மை பலம் இருக்­க­வில்லை.

தற்­போது 100 நாள் திட்­டத்­துக்கு பாரா­ளு­மன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்­பான்மை பலம் அவ­சி­ய­மாகும். தற்­போது எமக்கு பெரும்­பான்மை பலம் கிடைத்­துள்­ளது.

இதில் சுதந்­திரக் கட்­சியின் ஆத­ரவு முக்­கி­ய­மா­னது. மேலும் சுதந்­திரக் கட்­சியை முழு­மை­யாக ஜனா­தி­ப­திக்கு பொறுப்புக்கொடுத்­துள்­ளனர். எனவே, எங்­களால் சட்­ட­மூ­லங்­க­ளையும் அர­சி­ய­ல­மைப்பு திருத்­தங்­களையும் நிறை­வேற்­றிக்­கொள்ள முடியும்.

கேள்வி: தாம் பத­விக்கு கொண்­டு ­வந்த ஜனா­தி­பதி ஒரு கட்­சியின் தலைமைப் பத­வியை ஏற்­பது ஐக்­கிய தேசிய கட்­சிக்கு கவ­லை­யாக இருக்­காதா?

பதில்: இல்லை. நாங்கள் அதி­கா­ரத்­துக்கு வந்­ததும் சுதந்­திரக் கட்­சியை முழு­மை­யாக எடுப்­ப­தாக கூறி­யி­ருந்தோம். தேர்­த­லின்­ போது இதனைக் கூறினோம். சுதந்­திரக் கட்­சியின் யாப்­புக்கு அமை­யவே இதனை செய்­துள்ளோம். அதனை இல­கு­வாக பெற்­றுக் ­கொண்­டுள்ளோம்.

கேள்வி: ஏப்ரல் மாதம் 23 ஆம் திகதி பாரா­ளு­மன்றம் கலைக்­கப்­ப­ட­வுள்­ளது…

பதில்: அப்­ப­டி­யில்லை. பாரா­ளு­மன்றம் ஏப்ரல் 23 ஆம் திக­திதான் கலைக்­கப்­ப­ட­ வேண்டும் என்று இல்லை. தற்­போது 100 நாள் வேலைத்­திட்­டத்தை முன்­னெ­டுக்­கின்றோம். அதன்­படி சரி­யான ஒரு திக­தியில் பாரா­ளு­மன்­றத்தை கலைப்போம். அது 100 நாட்­களின் பின்னர் இடம்­பெறும்.

கேள்வி: தேர்­தலில் சுதந்­திரக் கட்சி தனித்தும் ஐக்­கிய தேசிய கட்சி தனித்தும் போட்­டி­யிடும். அப்­போது..

பதில்: நீங்­கபள் கூறு­வது போல் இல்­லாமல் அனைத்து கட்­சி­களும் ஒரு கூட்­ட­ணி­யா­கவும் போட்­டி­யி­டலாம். ஆச­னங்­களை பகிர்ந்து போட்­டி­யி­டுவோம்.

கேள்வி: யதார்த்­த­மாக பார்த்தால் அது நடக்­குமா?

பதில்: ஏன் முடி­யாது? ஒன்­றாக அமர்ந்து செயற்­ப­டலாம். இல்­லா­விடின் பிரிந்து நின்று போட்­டி­யி­டுவோம். பின்னர் இணைந்­து­கொள்வோம். நல்ல மனி­தர்­களை மக்கள் தெரிவு செய்­வார்கள்.

கேள்வி: பிரிந்து நின்று போட்­டி­யிட்ட பின்னர் கூடிய ஆச­னங்­களை பெறும் கட்­சிக்கு பிர­தமர் பதவி செல்லும் என்று உங்கள் விஞ்­ஞா­பனம் கூறு­கின்­றது. அப்­ப­டி­யானால் ஐக்­கிய தேசிய கட்சி சுதந்­திரக் கட்­சியை­விட குறைந்த ஆச­னங்­களை பெற்றால் என்ன நடக்கும்? பிர­தமர் பதவி யாருக்கு?

பதில்: பொதுத் தேர்­தலில் சுதந்­திரக் கட்சி கூடிய ஆச­னங்­களை பெற்றால் விஞ்­ஞா­ப­னத்தின் பிர­காரம் சுதந்­திரக் கட்­சிக்கு பிர­தமர் பதவி போகும். ஆனால் அந்த நேரத்தில் பிர­தமர் பத­வியை யாருக்கு வழங்­கு­வது என்று நாம் தீர்­மா­னிப்போம். இவ்­வ­ள­வு­தூரம் கஷ்­டப்­பட்டு ஜனா­தி­ப­தியை உரு­வாக்­கிய ஐக்­கிய தேசிய கட்­சியை பொதுத் தேர்­தலின் பின்னர் புறந்­தள்ளும் எண்ணம் எம்­மிடம் இல்லை.

கேள்வி: தேசிய பிரச்­சி­னைக்­கான தீர்­வுக்கு எவ்­வா­றான பிர­வேசம்? 100 நாட்­க­ளுக்குள் வருமா?

பதில்: 100 நாட்­க­ளுக்குள் அதனை உள்­ள­டக்­க­வில்லை. தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பும் அதனை அவ்­வாறு கோர­வில்லை. ஆனால் பாரா­ளு­மன்றத் தேர்­தலின் பின்னர் அதற்கு செல்வோம்.

அதா­வது தேசிய பிரச்­சி­னைக்கு தீர்­வாக 13 ஆவது திருத்தச் சட்­டத்­துக்கு அமை­வாக அதனை அடிப்­ப­டை­யாகக் கொண்டு அதி­கா­ரத்தை பகிர்ந்து தீர்வு ஒன்­றுக்கு செல்வோம். ஜன­நா­யக விட­யங்­களை நிலை­நாட்­டி­விட்டு இதனை செய்வோம். 13 க்கு குறைந்து போக­மாட்டோம்.

கேள்வி: உங்கள் பார்­வையில் மஹிந்த ராஜ­ப­க் ஷவின் தோல்­விக்கு என்ன காரணம்?

பதில்: அவர் முன்­னெ­டுத்த ஆட்­சி­யா­னது முற்­றாக ஒரு குடும்­பத்­தினால் செய்­யப்­பட்­டது. அந்தக் குடும்ப ஆட்­சி­யினால் கட்­சி­யினர் விரக்­தி­யுடன் இருந்­தனர்.

இதன்­போது ஒரு பகு­தி­யினர் வெளியில் வந்­தாலும் மற்ற பிரி­வினர் கட்­சிக்குள் இருந்­த­வாறு ஆத­ர­வ­ளித்­தனர். மஹிந்த ராஜ­ப­க் ஷ­வுக்கு கட்­சிக்­குள்­ளேயே யாரும் பாரிய ஆத­ரவை வழங்­க­வில்லை. கட்­சிக்கு வெளி­யேயும் யாரும் ஆத­ரவு வழங்­க­வில்லை.

கேள்வி: 2009 ஆம் யுத்­தத்தை முடித்து 2010 ஆம் ஆண்டு மீண்டும் ஜனா­தி­ப­தி­யாக மஹிந்த ராஜ­பக் ஷ வந்­த­போது அவர் முன் இருந்த சந்­தர்ப்­பங்­களை அவர் பயன்­ப­டுத்­த­வில்­லையா?

பதில்: அந்த சந்­தர்ப்­பங்­களை பயன்­ப­டுத்தும் தேவை அவ­ருக்கு இருக்­க­வில்லை. நாம் எடுத்துக் கூறினோம், அவற்றை மஹிந்த ராஜ­பக்ஷ ஏற்றார். ஆனால் செய்­ய­வில்லை. அவரின் சகோ­த­ர­ருக்கு அந்த எண்ணம் இருக்­க­வில்லை. அவர் இராணு­வத்­தினால் அனைத்­தையும் செய்­யலாம் என்ற எண்­ணத்தில் இருந்தார். முப்­ப­டையை வைத்து தொடர்ந்து நாட்டை ஆட்சி செய்­யலாம் என்று அவர்கள் கரு­தினர்.

கேள்வி: என்ன நம்­பிக்­கையில் கடந்த அர­சாங்­கத்தை விட்டு வெளி­யே­றி­னீர்கள்?

பதில்: எமது கொள்­கையில் நம்­பிக்கை இருந்­தது. நாட்டு மக்கள் எம்மை ஆத­ரிப்­பார்கள் என்ற நம்­பிக்கை இருந்­தது. தீர்­மா­னித்தோம். வெளி­யில்­வந்தோம்.

கேள்வி: எனினும் அந்த நேரத்தில் நீங்கள் ஒரு ஆபத்­தான முடிவை எடுத்­த­தாக கரு­த­வில்­லையா?

பதில்: அதனை மிகப்­பெ­ரிய ஆபத்­தான முடி­வாக கரு­தினோம். ஆனால் நம்­பிக்கை இருந்­தது.ஆனால் அந்த நம்­பிக்கை தேர்தல் முடி­வு­களில் பிர­தி­ப­லிக்­குமா? என்ற நம்­பிக்­கை­யின்­மையும் இருந்­தது. எனினும் அதனை செய்­ய­வேண்­டிய தேவை இருந்­தது.

கேள்வி: பிர­சாரக் காலத்தில் தோற்­று­வி­டுவோம் என்ற பயம் இருக்­க­வில்­லையா?

பதில்: பயம் இருக்­க­வில்லை. காரணம் மக்­களின் பிர­தி­ப­லிப்பு உற்­சா­க­மாக இருந்­தது. ஆனால் அது இல­கு­வான விட­ய­மாக அமை­ய­வில்லை.

கேள்வி: 2007 ஆம் ஆண்­டி­லி­ருந்து ராஜித்த சேனா­ரட்ன எவ்­வாறு இந்த அர­சாங்­கத்தில் இருந்தார்?

பதில்: 2009 ஆம் ஆண்­டு­வரை யுத்­தத்தை வெற்­றி­கொள்ளும் தேவை இருந்­தது. அதனை நிறை­வேற்­றினோம். பின்னர் சமா­தானம் வரும் என்று கரு­தினோம். யுத்தம் முடிந்­தது. ஆனால் சமா­தானம் வர­வில்லை. அப்­பி­ர­தேச மக்கள் கஷ்­டப்­பட்­டனர். மக்கள் அச்­சத்­துடன் வாழ்ந்­தனர். எனவே சமா­தா­னத்தை உரு­வாக்க அர­சாங்­கத்தை தோற்­க­டிக்­க­வேண்டும் என்ற நிலைப்­பாட்­டுக்கு வந்தோம்.

கேள்வி: கடந்த 7 வரு­டங்­க­ளாக நீங்கள் அர­சாங்­கத்தில் இருந்­தாலும் 13 ஆம் திருத்­தத்தை அமுல்­ப­டுத்­த­வேண்டும் என்­ப­தில் உறு­தி­யாக இருந்­தீர்கள். தற்­போது நீங்கள் அர­சாங்­கத்தின் பிர­பல முக்­கி­யஸ்தர். என்ன செய்யப் போகின்­றீர்கள்?

பதில்: நாம் கூறிய அனைத்­தையும் செய்வோம். பிரச்­சி­னை­களை தீர்க்க தேவை­யான நட­வ­டிக்கை எடுப்போம்.

கேள்வி: கடந்த அர­சாங்­கத்தில் இருந்­த­போது மைத்­தி­ரி­பால சிறி­சேன என்ற அர­சி­யல்­வாதி மீது உங்­க­ளுக்கு எவ்வாறு நம்­பிக்கை ஏற்­பட்­டது?

பதில்: அவர் பேசும் விதம் எனது கருத்­துக்கு ஒத்­த­தாக இருந்­தது. இதனை அவ­தா­னித்தேன். நான் எடுத்த உதா­ர­ணங்­க­ளையே அவரும் கூறினார். எனவே எமக்­கி­டையில் ஒற்­றுமை இருந்­ததை அவ­தா­னித்தேன். .

அதே­போன்று நான் அவரைப் பற்றி சிந்­தித்­ததைப் போன்றே அவர் என்னைப் பற்றி சிந்­தித்­தி­ருந்தார். அவர் எனது ஆச­னத்­துக்கு வந்து என்னை பற்றி பேசினார். எனக்கு உதவி செய்தார். எமக்­கி­டையில் நட்பு ஏற்­பட்­டது.

அதன் பின்னர் 2014 ஆம் ஆண்டு செப்­டெம்பர் மாதம் அவரின் பிறந்த தினத்­துக்­காக பொலன்­ன­று­வையில் பாரிய கூட்டம் நடை­பெற்­றது.

அதிக மக்கள் கலந்­து­கொண்­டனர். அந்தக் கூட்­டத்தில் நான் பிர­தான உரை நிகழ்த்­தினேன். இறு­தியில் அவர் ஏதா­வது ஒரு தீர்­மா­னத்தை எடுத்தால் அதற்கு நான் அவ­ருக்குப் பின்னால் வரு­வ­தாக உறு­தி­ய­ளித்தேன். இறு­தியில் அவரை தலைமைப் பதவிக்கு கொண்டு வந்தேன்.

கேள்வி: ராஜித்த சேனா­ரத்ன தனது அர­சியல் வாழ்க்­கையில் எடுத்த முடி­வுகள் சரி­யா­னதா?

பதில்: எடுத்த முடி­வுகள் சரி­யா­னவை. ஆனால் சில­வற்றை மக்கள் ஏற்­க­வில்லை. இட­து­சா­ரி­களின் முகாம்­க­ளிலும் இருந்தோம். பின்னர் அர­சி­யலில் பெற்ற அனு­ப­வத்­துடன் எடுத்த முடி­வுகள் சரி­யா­ன­வை­யாக அமைந்­தன. முன்னர் உபா­ய­ரீ­தி­யாக செயற்­ப­ட­வில்லை.

கேள்வி: மனித உரிமை மீறல்கள் குறித்த சர்­வ­தேச விசா­ர­ணைகள் குறித்தும் பேசப்­ப­டு­கின்­றது். முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்­தவை யுத்தக் குற்ற நீதி­மன்­றத்­துக்கு கொண்டு செல்­லப்­ போ­வ­தா­கவும் தேர்தல் காலத்தில் கூறப்­பட்­டது?

பதில்: அதற்கு ஒரு­போதும் இட­ம­ளிக்­க ­மாட்டோம். அதனை நாங்கள் ஏற்­க­னவே கூறி­விட்டோம். உள்­நாட்டில் விசா­ரணை நடத்­துவோம், சர்­வ­தேச விசா­ர­ணைக்கு அவரை உட்­ப­டுத்­த ­மாட்டோம்.

கேள்வி எந்­த­வி­த­மான சர்­வ­தேச விசா­ர­ணைக்கும் இட­ம­ளிக்­க­மாட்­டீர்­களா?

பதில்: இல்லை. சர்­வ­தேச விசா­ர­ணைக்கு மாற்­றாக எமது நாட்டில் விசா­ரணை செய்வோம்.

கேள்வி: வடக்கு மக்­களின் காணிப் பிரச்­சி­னைகள் குறித்து?

பதில்: வடக்கில் இரா­ணு­வத்­தினர் காணி­களை பாது­காப்பு கார­ணத்­துக்­காக எடுத்­துள்­ளனர். அவை பாது­காப்­புக்கு எந்­த­ளவு தூரம் அவ­சியம் என்­ப­தனை பார்க்­க­ வேண்டும். வர்த்­தக நட­வ­டிக்­கை­க­ளுக்கும் காணிகள் பெறப்­பட்­டுள்­ளன.

பாது­காப்­புக்கு இல்­லாமல் ஏனைய தேவை­க­ளுக்­காக பெறப்­பட்ட காணிகள் மீண்டும் பெற்­றுக்­கொ­டுக்­கப்­படும். தமிழ்க் கூட்­ட­மைப்பும் இதனை ஏற்­றுக்­கொண்­டுள்­ளது.

இரா­ணுவ முகாம்­க­ளுக்­கான காணிகள் மற்றும் அவற்­றுக்கு அருகில் இருக்கும் காணி­களை விடுத்து ஏனயை காணி­களை பெற்­றுக்­ கொ­டுப்போம். முடி­யு­மா­ன­வரை அதனை செய்வோம். இரா­ணு­வத்­தினர் அக்­கா­லத்தில் அர­சாங்க காணி­க­ளையும் பெற முயற்­சித்­தனர். சில அமைச்­சுக்­களின் காணி­களை பெற்­றனர்.

கேள்வி: வடக்கில் இரா­ணுவ முகாம்கள் குறித்தும் பேசப்­ப­டு­கின்­றதே?

பதில்: பாது­காப்­புக்கு எவ்­வ­ளவு இரா­ணுவ முகாம்கள் தேவை என்று பார்ப்போம். தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­களை தீர்த்து அந்த மக்­களை மகிழ்ச்­சிப்­ப­டுத்­தினால், புலிகள் மீண்டும் உரு­வா­க­ மாட்­டார்கள். இதனை புரிந்­து­ கொள்­ள­ வேண்டும்.

கேள்வி: தேசிய பிரச்­சினை தீர்வில் இந்­திய பங்­க­ளிப்பு எவ்­வாறு அமையும்? “

பதில்: இந்­தியா எங்­க­ளுக்கு முழு­யை­மான உத­வியை வழங்கும். கடந்த அர­சாங்­கத்தைப் போலன்றி எங்­க­ளுக்கு உதவி கிடைக்கும். தேசிய பிரச்­சி­னையை தீர்க்க இந்­தியா உதவி வழங்கும். 13 ஆம் திருத்­தத்தை அமுல்­ப­டுத்­து­வதே அவர்­களின் நோக்கம்.

கேள்வி: 13 ஆம் திருத்தச் சட்டம் இன்றி இந்த நாட்­டுக்கு எதிர்­காலம் இல்லை என்று முன்னர் கூறி­னீர்கள். தற்­போது?

பதில்: மாற்றம் இல்லை.

கேள்வி: மஹிந்த ராஜ­பக் ஷ உங்கள் நட்­புக்­கு­ரி­யவர். பஷில் ராஜ­பக் ஷ உங்­க­ளுடன் படித்­தவர். விலகி வரும்­போது கவ­லை­யாக இருக்கவில்லையா?

பதில்: மஹிந்த ராஜபக்ஷவைவிட்டு வரும்போது கவலையாக இருந்தது. அதனை உணர்ந்தேன். அதனால்தான் சொல்லாமல் வந்தேன். ஆனால் எல்லாவற்றுககும் மேலாக நாட்டை நேசிக்கின்றேன்.

கேள்வி: இராணுவ சதி குறித்து பேசப்படுகின்றது. ஆனால் மஹிந்த ராஜபக் ஷ உங்கள் நட்புக்குரியவர். அவர் இவ்வாறு முயற்சித்திருப்பாரா?

பதில்: அதிகாரம் இல்லாமல் போகும்போது அவர்கள் எதனையும் செய்வார்கள். அதிகாரம் விட்டுப்போகும் என்று அவர்கள் எண்ணியிருக்கமாட்டார்கள். அந்த முயற்சியில் மஹிந்த ராஜபக் ஷ எந்தளவு தூரம் இணங்கினார் என்று எனக்குத் தெரியாது. ஆனால் அவரின் உறவினருக்கு அதில் ஆர்வம் இருந்திருக்கின்றது.

கேள்வி: ஏன் அவ்வாறு கூறுகின்றீர்கள்?

பதில்: மஹிந்த ராஜபக்ஷவுக்கு அரசியல் புரிந்துணர்வு இருந்தது. அதனால்தான் அவர் உடனடியாக விடைபெற்றார். என்ன நடக்கின்றது என்று அவருக்கு தெரிந்தது. எனினும் அவரின் சகோதரர்களுக்கு அவ்வாறான மதிப்பீடு இருக்கவில்லை. காரணம் அவர்கள் அரசியல்வாதிகள் இல்லை. இது தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தப்படுகின்றது.

கேள்வி: பிரதம நீதியரசர் விவகாரம்?

பதில்: தற்போதைய பிரதம நீதியரசரை ஜனாதிபதி நியமித்தபோது நான் அன்று எதிர்த்தேன். அதனை அரசியல் மயமாக செய்யவேண்டாம் என்று அப்போதைய ஜனாதிபதிக்கு கூறினேன். ஆனால் நாங்கள் விரும்பாவிடினும் அது நடந்தது.

நேர்காணல்:ரொபட் அன்டனி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வே.சு. கருணாகரன் அவர்களின் “நினைவுகளும் கனவுகளும்” எனும் சிறப்பு நூல் வெளியீடு அழைப்பிதல்..!!
Next post பீகாரில் மகளை கொன்ற தந்தைக்கு மரண தண்டனை!!