ஜீன்ஸ்- டி சர்ட் அணிந்துக்கொண்டு வேலைக்கு வரலாம்: இன்போசிஸ் சி.இ.ஓ. அதிரடி உத்தரவு!!
Read Time:1 Minute, 23 Second
மென்பொருள் நிறுவனமான இன்போசிஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தங்கள் ஊழியர்கள் இனி கேஷ்வல் உடையில் வேலைக்கு வரலாம் என தெரிவித்துள்ளது.
உலக அளவில் மிக முக்கியமான மென்பொருள் நிறுவனமாக விளங்கும், இன்போசிஸ் நிறுவனத்தில் சுமார் 1.7 லட்சம் ஊழியர்கள் வேலை செய்கிறார்கள். இந்நிறுவனத்தில் பல ஆண்டுகளாக கடுமையான உடை விதிமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று பேண்ட், சர்ட் மற்றும் டை அணியும் உடைக்கட்டுபாடுகள் நீக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ஜூன் 1 முதல் உங்களுக்கு விருப்பமான உடைகளை அணிந்து வரலாம். வாரம் முழுவதும் உங்களுக்கு பிடித்த ஜீன்ஸ் – டி சர்ட்டை கூட அணிந்து வரலாம். அதே சமயம் அவை நாகரீகமான வகையில் இருக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Average Rating