ராஜஸ்தானில் மனைவி, இரண்டு குழந்தைகளை கோடரியால் வெட்டிக்கொன்று கோரத்தாண்டவமாடிய கணவன்!!

Read Time:1 Minute, 48 Second

f1175e29-58eb-4c12-b7c2-1c5fb1e84c22_S_secvpfராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் 35 வயது நபர் ஒருவர் தன் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளை கோடரியால் வெட்டிக்கொன்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சடல்பூர் பகுதியைச் சேர்ந்தவர் சுபாஷ் (35). இவரது மனைவி சந்தோஷ். இவர்களுக்கு ஸ்னேகா(7), ஹிமன்ஷு(5) ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளன. இந்நிலையில், சந்தோஷுக்கு வேறு ஒருவருடன் கள்ளத் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சுபாஷ் கண்டிக்கத் தொடங்கியதால், கணவன்-மனைவிக்கிடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

நேற்று இரவு வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற சுபாஷ், தன் மனைவி என்றும் பாராமல் கோடரியால் வெட்டிச் சாய்த்துள்ளார். அப்போதும் கோபம் தணியாமல், இரண்டு குழந்தைகளையும் வெட்டிக்கொன்று வெறியைத் தீர்த்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சுபாஷை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல், புறநகர்ப் பகுதியான டோங்க் நகரில் 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கழுத்து அறுபட்ட நிலையில் பிணமாக மீட்கப்பட்டுள்ளார். அவரை கொலை செய்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ரெயில் நிலைய பிளாட்பாரத்தில் குழந்தை பெற்றெடுத்த பெண்!!
Next post இங்கிலாந்தில் விரைவில் வாட்ஸ் அப்பிற்கு தடை?