இங்கிலாந்தில் விரைவில் வாட்ஸ் அப்பிற்கு தடை?

Read Time:1 Minute, 53 Second

8beca640-64ab-474e-b06d-58a2d9bc16b8_S_secvpfஇங்கிலாந்தில் விரைவில் வாட்ஸ் அப் வலைத்தளத்துக்கு தடை விதிக்கப்படலாம் என தெரிகிறது. மறைமுக குறியீடுகள் கொண்ட குறுஞ்செய்திகளை அனுப்ப தடைவிதிக்கும் புதிய சட்டத்தை இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் விரைவில் நிறைவேற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இங்கிலாந்தில் அண்மையில் அதிகரித்து வரும் பயங்கரவாத அச்சுறுத்தலையடுத்து, செய்திகளை சமூக வலைத்தளங்கள் மூலம் பதிவு செய்து கண்காணிக்க வகை செய்யும் சட்ட மசோதா தயாரிக்கப்பட்டுள்ளது. இணைய தொடர்பு வசதிகளே பயங்கரவாதிகள் எளிதாக தகவல் பறிமாறிக்கொள்ள ஏதுவாக இருப்பதாகவும், எனவே இங்கிலாந்து புலனாய்வுத் துறை இந்த இணைய தொடர்புகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகளைக் கொண்டு வரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சட்டம் அமலுக்கு வந்தால் ஸ்நாப் சாட், ஆப்பிள் நிறுவனத்தின் ஐமெசேஜ், வாட்ஸ்-ஆப் போன்றவைகளுக்கு இங்கிலாந்தில் நிரந்தரமாக தடை விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தகவல்கள் அனைத்தும் ஓராண்டுக்கு சேமிக்கப்பட்டு ஆய்வுக்குட்படுத்தப்படும்.

இந்த புதிய சட்டம் மக்களின் தனிப்பட்ட உரிமையை பாதிக்கும் என்ற சர்ச்சையும் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ராஜஸ்தானில் மனைவி, இரண்டு குழந்தைகளை கோடரியால் வெட்டிக்கொன்று கோரத்தாண்டவமாடிய கணவன்!!
Next post பிளேஸ்டேஷனில் விளையாடும் ஆர்வத்தில் தோழிக்கு மயக்க மருந்து கொடுத்த வாலிபர்!!