எதிர்வரும் ஆகஸ்ட் மாதமளவில் அடுத்த ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்டம் சமர்பிக்கப்படும் -நிமல் சிறிபாலடி சில்வா

எதிர்வரும் ஆகஸ்ட் மாதமளவில் அடுத்த ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் சமர்பிக்கப்படும் என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உபதலைவரும் அமைச்சருமான நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்துக்கான இடைக்கால கணக்கறிக்கை இம்மாதத்துடன் நிறைவடையவுள்ள நிலையில் அரசியலமைப்பில்...

விரைவில் அரசியல் சாசனத்தில் திருத்தம் கொண்டு வரப்படும் -பாதுகாப்புச் செயலாளர்

விரைவில் அரசியல் சாசனத்தில் திருத்தம் கொண்டு வரப்படும் என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அல்ஜஸீரா ஊடகத்திற்கு அளித்த விஷேட செவ்வியின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார் அரசியல் சாசனத் திருத்தங்களை கொண்டு...

ஜீ.எஸ்.பி.பிளஸ் சலுகைத் திட்டத்தை பெற்றுக்கொள்வது இலங்கையின் கையிலேயே தங்கியுள்ளது -ஐரோப்பிய ஒன்றியம்

ஜீ.எஸ்.பி.வரிச்சலுகைத் திட்டத்தை மீண்டும் நீடிப்பது இலங்கையின் கைகளிலேயே தங்கியிருப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது. சலுகைத் திட்டத்தை பெற்றுக் கொள்வது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிபந்தனைகளை இலங்கை அரசாங்கம் பூர்த்தி செய்ய வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்....

பதவிகளை கோராது நாட்டின் நலனுக்காக செயற்படுவேன் -ரோஹித்த போகொல்லாகம

எந்தவித பதவிகளையும் கோராது நாட்டின் நலனுக்காக தொடர்ந்தும் செயற்படவுள்ளதாக முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ரோஹித்தபோகொல்லாகம தெரிவித்துள்ளார் அபிவிருத்தி இலக்குகளை எட்டும் ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷவின் முயற்சிகளுக்கு ஒத்தழைப்பு வழங்கவுள்ளதாகவும் அரசியலிலிருந்து ஓய்வுபெறும் திட்டமில்லை எனவும் அவர்...

கெஹெலியவிற்கு ஊடகஅமைச்சுப் பொறுப்பு வழங்கப்படவுள்ளது

அரசாங்க பாதுகாப்பு பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு ஊடக அமைச்சுப் பொறுப்பு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. விரைவில் கெஹெலியவிற்கு ஊடக அமைச்சுப் பொறுப்பு வழங்கப்படும் எனக் குறிப்பிடப்படுகிறது. எவ்வாறெனினும் அமைச்சுப் பொறுப்பொன்றை வழங்குவது குறித்து இதுவரையில் தமக்கு...

ஜனாதிபதியிடம் நான்கு அமைச்சுப் பொறுப்புகள்..

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வசம் நான்கு அமைச்சுப் பொறுப்புகள் உள்ளதாகவும், பாதுகாப்பு, நிதித் திட்டமிடல், துறைமுக விமானசேவைகள், பெருந்தெருக்கள் ஆகிய நான்கு துறைகளுக்குமான அமைச்சுப் பொறுப்புகளே இவையென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை தமிழர் ஒருவருக்கு அமைச்சரவை...

மிகுந்த எதிர்பார்ப்புடன் வாக்களித்துள்ள மக்களுக்கு தார்மீகப் பொறுப்புணர்வுடன் சேவையாற்றவும் -ஜனாதிபதி

மிகுந்த எதிர்பார்ப்புடன் வாக்களித்துள்ள மக்களுக்கு தார்மீகப் பொறுப்புணர்வுடன் சேவையாற்றுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ புதிய அமைச்சர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். அதேநேரம் அமைச்சர்கள் அமைச்சரவையிலும், அமைச்சுக்களிலும் கூட்டுப் பொறுப்புடனும் புரிந்துணர்வுடனும் செயற்பட வேண்டுமெனவும் அவர் கேட்டுக்...

நாட்டின் அரசியலமைப்பை மாற்றுவதற்கு அடுத்த சில மாதங்களில் நடவடிக்கை

நாட்டின் அரசியலமைப்பை மாற்றுவதற்கு அடுத்த சில மாதங்களில் நடவடிக்கை எடுக்கப்படுமென்று சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட தலைவர்கள் தெரிவித்துள்ளனர். ஐக்கிய இலங்கைக்குள் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான வழிவகைகளை உள்ளடக்கியும் விகிதாசாரத் தேர்தல் முறையை மாற்றி அரசசேவையை...

இலங்கை: பெரீஸ் புதிய வெளியுறவு அமைச்சர் – 37 அமைச்சர்கள் பதவியேற்பு

இலங்கையில் 37 பேர் கொண்ட புதிய அமைச்சரவை பதவியேற்றுள்ளது. புதிய வெளியுறவு அமைச்சராக ஜி.எல். பெரீஸ் நியமிக்கப்பட்டுள்ளார். ராஜபக்சேவின் தம்பி பசில் ராஜபக்சே, பொருளாதார வளர்ச்சித் துறை அமைச்சராக்கப்பட்டுள்ளார். ராஜபக்சே தலைமையிலான ஐக்கிய மக்கள்...

போலி ஆவணங்களை காண்பித்து யாழ் செல்ல முயன்ற போது கைதான பிரான்ஸ் பிரஜை விடுதலை

யாழ் குடாநாட்டிற்கு சட்டவிரோதமாக செல்ல முயற்சித்தாரென்ற குற்றச்சாட்டின்பேரில் வவுனியா, ஓமந்தை சோதனைச்சாவடியில் கைதுசெய்யப்பட்ட பிரான்ஸ் நாட்டு பிரஜை நேற்றையதினம் விடுதலை செய்யப்பட்டுள்ளார். குறித்த பிரான்ஸ் நாட்டுப் பிரஜை வவுனியா நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டிருந்த நிலையிலேயே,...

இத்தாலியில் கொலை செய்யப்பட்ட இலங்கைப் பணிப்பெண்ணின் சடலத்தை இலங்கைக்கு எடுத்துவர நடவடிக்கை

இத்தாலியில் கொலை செய்யப்பட்ட வவுனியா கற்குளத்தைச் சேர்ந்த பெண்ணின் சடலம் இலங்கைக்கு எடுத்துவருவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இத்தாலியில் பணிப்பெண்ணாக பணிபுரிந்த 37வயதுடைய பொன்னுசாமி விஜயலட்சுமி கடந்த 17ம்திகதி கொலைசெய்யப்பட்டிருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

புலிகளின் சர்வதேசவலையமைப்பு இயங்கிவருவதாக இலங்கை குற்றச்சாட்டு

கடந்தவருடம் விடுதலைப்பலிகளின் தலைமைத்துவம் அழிக்கப்பட்டுள்ளபோதிலும் சர்வதேச வலயமைப்பின் நடவடிக்கைகள் தொடர்வதாக இலங்கை அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது விடுதலைப்பலிகள் அமைப்புக்கு சொந்தமான பல கப்பல்கள் சட்டவிரோதமாக வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக பிரேஸிலுக்கான இலங்கை தூதுவர்...