இஸ்ரேலுக்கு ரஷியா கண்டனம்
Read Time:48 Second
லெபனான் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்துவதற்கு ரஷியா கண்டனம் தெரிவித்து உள்ளது. இஸ்ரேலின் தாக்குதல் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கை என்பதையும் கடந்து வெகுதூரம் போய்விட்டது என்று கூறி உள்ளது. சிறைப்பிடிக்கப்பட்ட 2 இஸ்ரேலியர்களை மீட்பதற்காகத்தான் இந்த ராணுவநடவடிக்கை என்று கூறிய இஸ்ரேல், அதைத்தாண்டி மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்தி உள்ளது என்று ரஷியாவின் வெளிநாட்டு அமைச்சரகம் வெளியிட்டுஉள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.