லெபனானுக்கு ரூ.63 கோடி உதவி ஐரோப்பிய ஒன்றியம் வழங்கியது
Read Time:54 Second
லெபனான் நாட்டின் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் விமானத்தாக்குதல் குறித்து கவலை தெரிவித்து உள்ள ஐரோப்பிய ஒன்றியம் அந்தநாட்டுக்கு 63 கோடி ரூபாயை உதவித்தொகையாக வழங்கி உள்ளது. லெபனானின் அவசரத்தேவைக்காக முதற்கட்ட உதவியாக 63 கோடி ரூபாயை வழங்குவதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்து உள்ளது.
இந்த உதவித்தொகை 48 அல்லது 72 மணிநேரத்தில் கிடைக்கும் என்றும், உதவித்தொகையை ஐ.நா.சபையிடம் அல்லது அரசு சாரா உதவி நிறுவனங்களிடம் கொடுத்து விநியோகிக்கச்செய்வோம் என்றும் ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்து உள்ளது.