ஈராக்கில் இருந்து ஜப்பான் ராணுவம் நாடு திரும்பியது
Read Time:1 Minute, 3 Second
ஈராக்கில் பாதுகாப்புப்பணிக்காக அமெரிக்காவின் வேண்டுகோளுக்கு இணங்க ஜப்பான் 770 ராணுவ வீரர்களை அனுப்பி இருந்தது. இப்போது அங்கு இருந்து முதல் கட்டமாக 170 ராணுவ வீரர்கள் நேற்று ஜப்பான் திரும்பினார்கள். அவர்கள் தனியார் விமானம் மூலம் குவைத்தில் இருந்து டோக்கியோ திரும்பினர்.
அவர்களை வரவேற்க அவர்கள் குடும்பத்தினர் விமான நிலையத்துக்கு வந்து இருந்தனர். கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கு பிறகு அவர்கள் தாய்நாடு திரும்பி உள்ளனர்.
எஞ்சி உள்ள 600 வீரர்களும் தெற்கு ஈரானில் சமாவா நகரில் உள்ள முகாமில் இருந்து வெளியேறிவிட்டனர். அவர்கள் இந்த மாத இறுதியில் நாடு திரும்புவார்கள்.