சிங்கப்பூர் தேசிய கொடி அவமதிப்பு: மன்னிப்பு கேட்டது இஸ்ரேல்…!!

Read Time:1 Minute, 26 Second

46143043-c45c-48f3-bd3d-072622144204_S_secvpfசிங்கபூரில் இஸ்ரேல் தூதரகம் உள்ளது. அங்கு வார இறுதியில் விருந்து நிகழ்ச்சி நடந்தது. அதில் பலர் பங்கேற்றனர்.

விருந்தின் போது அங்கு போடப்பட்ட மேஜைகளின் மீது சிங்கப்பூர் தேசிய கொடி விரிக்கப்பட்டிருந்தது. அதன் மீது பல விதமான பாட்டில்கள், கண்ணாடி டம்ளர்கள் போன்றவை வைக்கப்பட்டிருந்தன.

இக்காட்சி சிங்கப்பூரில் ஒளிபரப்பாகும் ஒரு டி.வி. செய்தி சேனலில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து இஸ்ரேல் தூதரரை நேரடியாக அழைத்து சிங்கப்பூர் வெளியுறவு துறை அமைச்சகம் விளக்கம் கேட்டு சம்மன் வழங்கியது. இது ஒரு அவமதிப்பு என கண்டனம் தெரிவித்தது.

இதற்கு இஸ்ரேல் தூதரகம் மன்னிப்பு கேட்டுள்ளது. இச்செயலில் ஈடுபட்ட ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தது. சிங்கப்பூரில் தங்கியிருக்கும் தூதர்கள் உள்ளிட்ட அனைவரும் அந்நாட்டு சட்ட திட்டங்களை கடைப்பிடிக்க வேண்டும் என அறிவித்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post துபாயில் பற்றி எரியும் ஹோட்டலுக்கு எதிரே வண்ணமிகு வாண வேடிக்கை: விசித்திர வீடியோ…!!
Next post புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு சென்ற என்ஜினீயரிங் மாணவர்கள் 2 பேர் விபத்தில் பலி…!!