யாழில் வேலைவாய்ப்பை பெற்றுத் தருவதாகக் கூறும் முகவர்களிடம் பணத்தை கொடுத்து ஏமாற வேண்டாம்…!!

Read Time:3 Minute, 21 Second

d1யாழ்.மாவட்டத்தில் உள்ள வங்கிகளில் வேலைவாய்ப்பை பெற்றுத்தருவதாக கூறி பணமோசடி நடைபெற்று வருவதாகவும் முகவர்கள் எனக் கூறிவருபவர்களிடம் பணத்தை கொடுத்து ஏமாற வேண்டாம் என யாழ். மாவட்ட வங்கியாளர் சங்கத் தலைவர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ்.மாவட்டத்தில் சிலநாட்க ளுக்கு முன்னர் பல்வேறு துறை களில் வேலைவாய்ப்பை எதிர் பார்த்திருக்கும் இளைஞர் யுவதிக ளிடம் சென்ற சிலர் தாம் தனியார் வங்கி ஒன்றின் முகவர்கள்; என தெரிவித்து குறித்த வங்கியில் வேலைவாய்ப்பை பெற்றுத்தரு வதாக கூறி அவர்களுடைய விபரங் களை பெற்றுள்ளனர்.

சிலநாட்களின் பின்னர் அந்த நபர்கள் குறித்த இளைஞர் யுவதி களிடம் வேலைக்கு தேர்வு செய் யப்பட்டிருப்பதாகவும் 30ஆயிரம் ரூபாய் பணத்தை வைப்பிலிடும் படியும் கூறியுள்ளனர். அதை நம் பிய இளைஞர்கள் பணத்தை வைப் பிலிட்டு ஏமாற்றமடைந்துள்ளனர்.
இவ்வாறு 3 நாட்களுக்குள் 5 இலட்சத்துக்கும் மேற்பட்ட தொகை மோசடி செய்யப்பட்டுள்ளதாக எம க்கு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.

எனவே எந்தவொரு வங்கியி லும் முகவர் ஊடாக பணம் சேர்க்க ப்பட்டு வேலைவாய்ப்புக்கள் வழங் கப்படுவதில்லை என்பதை பொது மக்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு வங்கியின் முகவர் என தெரிவித்து வருபவர்கள் தொடர்பில் விழிப்புடன் இருக்க வேண்டும். வேலைவாய்ப்பு தொடர்பாக யாரே னும் புதிய விபரங்களை தெரிவித் தால் அவ்வாறான நடைமுறைகள் உள்ளனவா என குறித்த வங்கி யில் நேரடியாக தொடர்பு கொண்டு உண்மைத் தன்மையை தெளி வுபடுத்த வேண்டும்.

வேலைவாய்ப்பை பெறவிரும்பு பவர்கள் குறித்த வங்கிகளின் இணையத்தளங்க@டாகவோ அல்லது ஆளணி முகாமைத்துவ பிரிவின் ஊடாகவோ தமது விண் ணப்பங்களை அனுப்பமுடியும்.
அல்லது ஒரு வங்கியின் கிளை முகாமையாளர் தரத்தில் உள்ள வர்கள் அல்லது வங்கி ஊழியர் களிடம் வேலைவாய்ப்பு தொடர் பான விபரங்களை பெற்றுக்கொ ள்ள முடியும்.

வேலைவாய்ப்பை பெற் றுத்தருவாக கூறி பணமோசடியில் ஈடுபடுவது யாழில் தற்போது அதி கரித்து வருவதாகவும் அவர்கள் தொடர்பில் விழிப்புடன் இருக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கொழும்பின் சில பகுதிகளில் போக்குவரத்துக்கு கட்டுப்பாடு…!!
Next post விரைவில் இலங்கை வருவார் சுஷ்மா சுவராஜ்…!!