வன்னிப்புலிகளால் கடத்தப்பட்ட சமூகசேவகர் பாரூக்கை மீட்க புளொட் நடவடிக்கை எடுக்குமா?
நேற்றைய (16.05.2006) புலிகளின் நிதர்சனம் இணையதளத்தில் 12.12.2005ல் வன்னிப்புலிகளால் கடத்திச் செல்லப்பட்ட புளொட் அமைப்பின் மத்தியகுழு உறுப்பினரும் சமூகசேவகருமான சின்னத்தம்பி கணேசலிங்கம் (பாரூக்) என்பவர் சுயவிருப்பத்தில் புளொட் தலைவருடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக வன்னி வந்து சேர்ந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதை நிரூபிக்கும் வகையில் பல நிழற்படங்கள் அவ்விணையதளத்தில் பிரசுரிக்கப்பட்டிருந்தன. அதாவது பாரூக் வன்னியில் நிற்கின்ற பல புகைப்படங்களை அவ்விணையதளம் பிரசுரித்திருந்தது.
என்ன காரணங்களுக்காகவோ பிரசுரித்த சில நிமிடங்களிலேயே உடனடியாக அந்த செய்தி அவ்விணையதளத்திலிருந்து எடுக்கப்பட்டு விட்டது. எடுக்கப்பட்டிருந்தாலும் கூட இந்த ஆதாரத்தை அடிப்படையாக வைத்து பாரூக்கை கடத்தியவர்கள் புலிகள் என்பதையும் வன்னியிலேயே அவர் புலிகளால் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்பதையும் புளொட் தலைமைப்பீடம் சர்வதேசத்துக்கு அம்பலப்படுத்தி பாரூக் அவர்களை வன்னிப்புலிகளிடமிருந்து மீட்டெடுக்கும் நடவடிக்கையை எடுக்கப் போகிறார்களா? அல்லது தங்களது உயிர்களுக்கு பயந்து வழமை போல் புளொட் அமைப்பு மௌனம் சாதிக்கப் போகிறார்களா?… இதேவேளை அதிரடி இணையதளத்திற்கு கிடைத்த உறுதியான தகவல்களின் மூலம் புளொட்பாரூக் புலிகளால் கடத்தப்பட்டு வன்னி கொண்டு செல்லப்பட்டதை அறிந்து பாரூக் அவர்களைப் பார்வையிடச் சென்ற அவரது துணைவியார், இரண்டு பிள்ளைகள், தாயார், சகோதரி ஆகியோரில் பாரூக்கின் துணைவியார் மட்டும் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வருகின்றது. நான்கு சுவர்களுக்குள் நலமாக இருந்து கொண்டு ஐனநாயகம் பேசும் புளொட் அமைப்பினரே உங்களின் முக்கிய உறுப்பினரை மட்டுமல்ல அவரது துணைவியார் குடும்பத்தினரைக் கூட புலிகளிடமிருந்து உங்களால் காப்பாற்ற முடியவில்லையா?? இதற்கு உங்களது பதில் தான் என்ன???
-அதிரடி ஆசிரியர்குழு-
Average Rating