பிரபா குழுவுக்கெதிரான ஒரு தலைப்பட்சமான யுத்த நிறுத்தம் மீளப்பெறப்படுகின்றது. எமது பதிலடி நடவடிக்கை தொடரும்- கருணாஅம்மானின் ‘ரிஎம்விபி” அறிவிப்பு-

Read Time:4 Minute, 9 Second

karuna.jpg இலங்கை அரசாங்கத்தின் சமாதான முன்னெடுப்புகளுக்கு ஆதரவளிக்கும் முகமாக எமது அரசியல் பீடத்தினால் முடிவுசெய்யப்பட்ட பிரபாகுழுவுக்கு எதிரான கடந்த 30.ஜனவரி.2006 அன்று பிரகடனப்படுத்தப்பட்ட யுத்தநிறுத்தத்தை மீளப்பெற எமது அரசியல்பீடம் முடிவு செய்துள்ளதென தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகளின் அரசியற்துறை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாம் யுத்தநிறுத்தத்தை மேற்கொண்டது பிரபாகுழுவுக்காக அல்ல. ஏனெனில் சமாதானம், யுத்த நிறுத்தம், புரிந்துணர்வு இவையெல்லாம் பிரபாகுழுவின் அகராதியில் இல்லாத விடயங்கள். அவர்களுக்குத் தெரிந்த ஒரேமொழி கொலைதான். எமது அரசியற்பீடம் ஏற்கனவே பிரகடனப்படுத்திய யுத்தநிறுத்தத்தில் தெளிவாகவே கூறியிருந்தோம் எமது தாக்குதல்களை நிறுத்தியிருக்கும் காலப்பகுதியில் எமது போராளிகளுக்கோ அல்லது எமது ஆதரவாளர்களுக்கோ பிரபாகுழுவினால் ஏதும் தாக்குதல்கள் இடம்பெறும் பட்சத்தில் நாம் இலங்கை போர்நிறுத்த கண்காணிப்புக் குழுவிடம் முறையிடப் போவதில்லை எனவும், எமது போராளிகளையும், ஆதரவாளர்களையும் பாதுகாக்க நடைமுறைச் சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம் என்று… இதற்கிணங்க கடந்த 30ஏப்ரல்2006 அன்று எமது காந்தாக்காடு முகாமை பிரபாகுழு தாக்கியதை தொடர்ந்து எமது இராணுவப் பிரிவு நடைமுறைச் சாத்தியமான தமது பதிலடி நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது. பிரபாகுழுவுக்கு தெரிந்த மொழியிலேயே நாம் அவர்களுடன் பேசுவோம். எமது பதிலடி நடவடிக்கையின் முதற்கட்டமாக மங்களன் மாஸ்டர் தலைமையிலான எமது விசேட தாக்குதல் படையணியினால் பிரபா குழுவின் மூது}ர் நாவலடிக் காவலரண்கள் கடந்த 02மே2006 அன்று தாக்கியழிக்கப்பட்டது. இதில் எட்டு பிரபாகுழுவின் உறுப்பினர்கள் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டதுடன் பலர் படுகாயமடைந்துள்ளனர். பிரபாகுழுவினர் கொக்கரிப்பதைப் போல எமது காந்தாக்காடு முகாம் மீதான அவர்களின் தாக்குதல் வெற்றியளிக்கவில்லை. உண்மையில் இப்போது பிரபாகுழுவினர் எமது போராளிகளின் போராட்டத் திறமைகளைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். பிரபாகுழுவின் முன்னனித் தளபதிகளினால் 300இற்கும் மேற்பட்ட உறுப்பினர்களுடன் எமது காந்தாக்காடு முகாமை தாக்கிய போதும் றீகசீலன் தலைமையிலான எமது 50போராளிகளின் தாக்குதலை பிரபாகுழுவினால் சமாளிக்க முடியவில்லை. இறுதியில் அவர்கள் விரண்டோட வேண்டியேற்பட்டது. அத்தாக்குதலில் எமது ஒன்பது போராளிகள் வீரமரணம் அடைந்தனர். பிரபாகுழுவின் தரப்பில் அவர்களது 14உறுப்பினர்கள் கொல்லப்பட்டனர். புpரபாகுழுவின் இத்தாக்குதலினால் நாம் எழுச்சியடைந்துள்ளோமே தவிர வீழ்ச்சியடையவில்லை. இதனை நாம் பிரபாகுழுவுக்கு உணர்த்தி வருகின்றோம். -‘ரிஎம்விபி”-

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வன்னிப்புலிகளால் கடத்தப்பட்ட சமூகசேவகர் பாரூக்கை மீட்க புளொட் நடவடிக்கை எடுக்குமா?
Next post வவுனியாவில் வர்த்தக நிலையம் மீது கைக்குண்டுத் தாக்குதல் கதவடைக்காததே காரணம்