சம்பளப் பிரச்சனைக்குத் தீர்வு கிடைக்காவிடில் போராட்டம் வெடிக்கும்…!!

Read Time:2 Minute, 58 Second

tryyyhhhநீண்டகாலமாக ஆசிரியர்களுக்கு வழங்கப்படாமல் இருக்கும் சம்பள நிலுவையை வழங்க நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப்படுமென ஆசிரியர்,அதிபர்கள் தொழிற்சங்கத்தின் ஒருங்கிணைப்பு குழு பொதுச் செயலாளர் மகிந்த ஜெயசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த 1997ஆம் ஆண்டு சம்பள நிர்ணய ஆணைக்குழு அமைக்கப்பட்டு அரச சேவையாளர்களின் சம்பள பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்பட்டபோதும், தற்போது 19 வருடங்களாகியும் ஆசியரியர்களின் சம்பள பிரச்சினைக்கு தீர்வு கிட்டாமல் உள்ளது.

அத்துடன், இன்று ஆசிரியர்களுக்கு கற்பிக்க நேரம் இல்லாமல், வவுச்சர்களை நிரப்புவதற்கும், மருந்துகொடுக்கும் போது அவற்றிற்கான விண்ணப்பங்களை நிரப்புவதற்கும், செயற்றிட்டங்களை செய்வதற்குமே நேரம் சரியாக உள்ளது.

பிள்ளைகளுக்கு பாடம் கற்பிக்க எமக்கு நேரமில்லை. கல்வியமைச்சருக்கு நாம் இதுகுறித்து எழுத்துமூலம் அறிவித்தும் அவர், அதற்கு எவ்வித பதிலும் வழங்கவில்லை.ஒவ்வொரு முறையும் வரும் அரசாங்கங்களிடம் எழுத்துமூலம் கோரிக்கை விடுத்து, மனுக்களை கையளித்து, ஆர்ப்பாட்டம் நடத்தியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில், ஜனநாயகத்தையும் நல்லாட்சியையும் நிலைநாட்டுவதாக வாக்குறுதி அளித்துவிட்டு ஆட்சிக்கு வந்த, நூற்றிற்கு 6 வீதம் கல்விக்கு நிதியொதுக்கீடு செய்துள்ளதாக தம்பட்டம் அடிக்கும் இந்தக் குழப்பம் நிறைந்த அரசாங்கம் இதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இல்லாதுவிடில், எதிர்வரும் 20ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எமது பிரச்சினைகள் குறித்து எழுத்துமூலம் அறிவிக்கவுள்ளளோம். அதன் மூலமும் தீர்வு கிடைக்காவிட்டால் மாபெரும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உறவினர்களால் இராணுவத்தினரிடம் நேரடியாக கையளிக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது…?
Next post கிணற்றில் தவறி வீழ்ந்து வயோதிபப் பெண் சாவு…!!