நீர் மூழ்கி வீரரின் துணிச்சல்..!!
மெக்ஸிக்கோவின் குவாடலூப் தீவுக்கு அப்பால் கடலுக்குள் இறக்கப்பட்ட கூண்டொன்றிலிருந்த நீர்மூழ்கிவீரர் ஒருவர், அந்தக் கூண்டிலிருந்து தலையை வெளியே நீட்டி அந்தக் கூண்டை நோக்கி வந்த அபாயகரமான சுறாவின் மூக்குப் பகுதியில் துணிச்சலுடன் தட்டிக் கொடுப்பதை படத்தில் காணலாம்.
சுறா மீன்களைக் கவர்ந்திழுத்து அவற்றை அருகாமையில் அவதானிப்பதே அந்த 3 நீர்மூழ்கிவீரர்களதும் ஆரம்ப நோக்கமாக இருந்தது. இதற்காக அவர்கள் கூண்டுக்கு வெளியில் உணவுப் பொருட்களை தொங்கவிட்டிருந்தனர்.
இந்நிலையில் உணவால் கவரப்பட்டு அவர்களது கூண்டை நெருங்கி வந்த அபாயகரமான சுறா மீனை கண்ட குறிப்பிட்ட நீர்மூழ்கிவீரர் ஏனைய நீர்மூழ்கி வீரர்கள் சிறிதும் எதிர்பார்க்காத தருணத்தில் கூண்டிற்கு வெளியில் தலையை நீட்டி அந்த சுறா மீனின் மூக்குப் பகுதியை துணிகரமாக தட்டி அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தியுள்ளார்.
Average Rating