By 29 January 2016 0 Comments

யாழில் இருந்து கண்டிக்கு மேலதிக பேருந்து சேவை…!!

ERTRTRTயாழ்ப்பாணத்தில் இருந்து கண்டிக்கு எதிர்வரும் 01ஆம் திகதியில் இருந்து மேலதிக பஸ் சேவை ஒன்றினை ஆரம்பிக்கவுள்ளதாக போக்குவரத்து சபையின் கோண்டாவில் சாலை முகாமையாளர் செல்லத்துரை குணபாலசிங்கும், இன்று தெரிவித்தார்.

இதன்படி, இரவு 8:45க்கு யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையத்தில் இருந்து புறப்படும் பஸ் அதிகாலை 5:30க்கு கண்டியினை சென்றடையும். அதேபோல் அவ் பஸ் இரவு 7:00 மணிக்கு கண்டி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து பயணத்தினை ஆரம்பித்து மறுநாள் அதிகாலை 4:30க்கு யாழ்ப்பாணத்தினை வந்தடையும் என அவர் தெரிவித்தார்.

தற்போது கண்டி – யாழ்ப்பாணத்துக்கு 05 சேவைகள் இடம்பெறுவதுடன், இச்சேவைக்கு பருத்தித்துறை சாலையின் ஒத்துழைப்பும் பெறப்பட்டுள்ளது.



Post a Comment

Protected by WP Anti Spam