By 29 January 2016 0 Comments

“மாட்டிறைச்சி அரசியல்”: ஒரு திசை திருப்பும் தந்திரம்..!! -லத்தீஃப் பாரூக்

timthumbமக்கள் அனைவரும் எதிர்பார்ப்பது என்னவென்றால் அரசாங்கம் நடவடிக்கை மGnasekaraேற்கொண்டு நாட்டைப் பாழடிப்பவர்களை நீதிக்கு முன் கொண்டுவரவேண்டும் என்றுதான்.

முஸ்லிம் சமூகம் 8 ஜனவரி, 2015; ஜனாதிபதி தேர்தலின்போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு பெரும் எண்ணிக்கையில் வாக்களித்தது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கூலிப்படை என சந்தேகிக்கப்படும் பொதுபல சேனாவைப் போன்ற ஒரு சிறிய விரல்விட்டு எண்ணக்கூடிய சிங்கள இனவாதிகளின் அடக்குமுறையிலிருந்து தங்களை விடுவிக்க வேண்டும் என்பதற்காகவே.

எனினும் அவருக்கு வாக்களித்த முஸ்லிம்கள் மற்றும் அதேபோல முஸ்லிம் அல்லாதவர்கள் பொதுபல சேனா குழுவினர் அதன் தீவிரவாத தலைவர் வண.கலகொட அத்தே ஞ}னசார தேரர் தலைமையில் ஜனாதிபதி சிறிசேனவுடன் நடத்திய அதிர்ச்சியான சந்திப்பை பற்றி இப்போது கேள்வி எழுப்புகிறார்கள்.

“நாட்டை கிட்டத்தட்ட கொலைக்களமாக மாற்றியிருக்கும் இதே இனவாதிகளுக்கு ஒரு புதிய வாழ்க்கைக்கான குத்தகை வழங்கப்பட்டுள்ளதா”. தீவிலுள்ள முஸ்லிம்களை எப்பாடுபட்டாவது அழிக்க வேண்டும் எனக் காத்திருக்கும் மிகவும் மோசமான பெயர் பெற்ற வண. ஞானசார தேரர் இந்த சந்திப்பு ஒரு வெற்றி எனத் தெரிவித்திருப்பதிலிருந்து, இந்த சந்திப்பு விஷேசமாக முஸ்லிம்கள் மத்தியில் தீவிர கவலையை ஏற்படுத்தியுள்ளது.

ஜனாதிபதி சிறிசேன மாடுகளை வெட்டுவதை தடை செய்யப்போவதாக அறிவித்ததின் இடையில் இது நிகழ்ந்துள்ளது, இனவாதிகளை கௌரவிப்பது போல வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு முஸ்லிம்கள்மீது வெறுப்பு ஏற்படும்படியான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.

வண. ஞானசார தேரர் சமாதானத்துக்கான ஒரு மனிதர் அல்ல என்பது பொதுவாக அனைவரும் அறிந்ததே. கடந்த பொதுத் தேர்தலின்போது அவரது சொந்த மக்களாலேயே அவர் நிராகரிக்கப் பட்டிருந்தார். அவரது பேச்சு பற்றிய காணொளிக் காட்சிகள் தனது சொந்த நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப சிங்களவரைத் தூண்டுபவைகளாக உள்ளன.

அவரது ஆவேசமான பேச்சு சிங்களவருக்கும் மற்றும் முஸ்லிம்களுக்கும் இடையில் பகைமையை உருவாக்கியதோடு, அதன் உச்சக் கட்டமாக அளுத்கம, தர்கா நகரம் மற்றும் பேருவளை போன்ற இடங்களில் முஸ்லிம்கள் மீது தாக்குதல் தொடுக்கவும் வகை செய்தது.

இந்த தாக்குதல்களின்போது முஸ்லிம்கள் கொல்லப்பட்டார்கள், அவர்களது வீடுகளும் மற்றும் வியாபார ஸ்தலங்களும் திட்டமிட்ட வகையில் தீ வைத்து நாசப்படுத்துவதற்கு முன்னர் கொள்ளையடிக்கப்பட்டு வெறுமையாக்கப் பட்டன.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தோற்கடிக்கப்பட்ட ஜனாதிபதி தேர்தல் 8 ஜனவரி 2015 வரை .ஞானதிஸ்ஸ தேரர், தனது அக்கிரமச் செயல்களைத் தொடர்ந்தார். ராஜபக்ஸவின் தோல்வியுடன் வண.ஞானதிஸ்ஸ தேரர், நாட்டை மற்றுமொரு 1983 வகையான படுகொலைகள் நடத்தப்படக் கூடிய முயற்சியின் விளிம்புவரை சென்றுவிட்ட அவரது பேரழிவுப் பிரச்சாரத்திற்கான ஆதரவை இழந்தார். ஜனாதிபதி சிறிசேன தெரிவு செய்யப்பட்டதின் பின்னர் அவர் கிட்டத்திட்ட ஒளிவு நிலைக்குச் சென்றார்

முன்னர் வண.ஞானதிஸ்ஸ தேரர் புனித குரானைத் தடை செய்யும்படி அழைப்பு விடுத்திருந்தார். ஒருவேளை அப்படியான அழைப்புகளின் தீவிரத்தை அவர் அறியவில்லை போலும், அத்தகைய செயல்கள் சர்வதேச எதிர்விளைவுகளை ஏற்படுத்துவதுடன், ஸ்ரீலங்காவின் மிகவும் உண்மையான நண்பர்களாகவுள்ள முஸ்லிம் நாடுகளை அதனிடமிருந்து அந்நியப்படுத்தியும் விடும்.

மேலும் ஒரு மில்லியனுக்கும் மேலான ஸ்ரீலங்காவாசிகள் வளைகுடா நாடுகளில் அமைதியாக வாழ்ந்து கொண்டும் மற்றும் வேலை செய்து வருடாந்தம் சுமார் ஏழு பில்லியன் ருபாய்களை ஸ்ரீலங்காவுக்கு அனுப்பி வருவதால் எங்கள் பொருளாதாரத்தை தாங்க அது உதவுகிறது இல்லையேல் அது சரிந்துவிடும் என்பதும் அவருக்கு மறந்துவிட்டது.

வண.ஞானதிஸ்ஸ தேரருக்கு எதிராக நீதிமன்ற வழக்குகள், விசேடமாக இஸ்லாம் மற்றும் முஸ்லிம்களை விமர்சித்ததுக்கான வழக்குகள் உள்ளன. அவரது அக்கிரமச்செயல் ஹோமகம நீதவான் ரங்க திசாநாயக்காவை, 25 ஜனவரி,2016 திங்களன்று நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பெயரில் வண.ஞானதிஸ்ஸ தேரரை கைது செய்யும்படி உத்தரவிட நிர்ப்பந்தித்தது. நேற்று, 26 ஜனவரி, 2016ல் அவர் வரும் பெப்ரவரி 9ம் திகதிவரை மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அப்படியான சூழ்நிலையில் ஜனாதிபதி சிறிசேன அவரைச் சந்தித்ததும் மற்றும் அதன் மத்தியில் அவரது திட்டமான மாடுகளை வெட்டுவதற்கான தடையை திணிப்பதும் குறிப்பாக தீவில் உள்ள முஸ்லிம்களின் வாழ்க்கையிலும் மற்றும் நாட்டின்மீதும் அதன் ஒட்டுமொத்த பாதிப்பையும் தீவிர சிக்கல்களின் கண்ணோட்டத்தில் பார்க்க வைப்பது துரதிருஷ்டமானது.

மற்றும் இப்போது மற்றொரு இனவாதக் கும்பலான “சிங்க லே” வந்துள்ளது, ஒருவேளை மற்றொரு பொதுபல சேனாவின் முகத்துடன், வெளிப்படையாக முஸ்லிம்களுக்கு எதிராக சிங்களவரை தூண்டிவிடுவதற்காக. இந்த குழுவின் பிரச்சாரத்தின் தாக்கம் அப்படியானது சில வாரங்களுக்குள்ளேயே அது ஒரு கணக்கிடும் சக்தியாக மாறியுள்ளது.

சிங்கலே அமைப்பு கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இருந்து கண்டி தலதா மாளிகை வரை ஒரு மோட்டார் ரத பவனியை ஏற்பாடு செய்திருந்தது, இந்த ஊர்வலம் முஸ்லிம்கள் செறிந்து வாழும் நகரமாகிய மாவனல்லயில் நின்று செல்வதற்கும் ஏற்பாடாகியிருந்தது, அங்கு அவர்கள் காவல்துறையினருடன் ஒரு முறுகலை உண்டாக்கி பதற்றமான ஒரு நிலைமையை ஏற்படுத்தினார்கள்.

இந்த மோட்டார் பவனியின்போது அவர்கள் சட்டத்தை மீறி நடந்து கொண்டதுடன் தேசியக்கொடியை அலட்சியம் செய்து பௌத்த கொடியை மட்டும் காவிச் சென்றதினால் அவர்களின் மறைமுகமான நிகழ்ச்சி நிரலைப்பற்றி தெளிவான செய்தியைச் சொல்லியிருக்கிறார்கள். இது வெளிப்படையான ஒரு சட்டமீறலாக இருந்தது ஆனாலும் அதைத் தொடர அனுமதிக்கப்பட்டது.

ஜனாதிபதி சிறிசேன இந்தக் குழுவைப் பற்றிப் பேசுமளவுக்கு அது மதிப்பு வாய்ந்ததில்லை என்று ஒதுக்கித் தள்ளியபோதிலும், இனக்கலவரத்தை தூண்டும் அளவுக்கு தேவையான பொருட்கள் அனைத்தையும் அது கொண்டுள்ளது. கேள்வி என்னவென்றால் அனைத்து சமூகங்களினாலும் ஆட்சிக்கு வருவதற்காக வாக்களிக்கப்பட்டதும் மற்றும் நலலிணக்கம் பற்றி பேசி வருவதுமான அரசாங்கம் ஏன் இத்தகைய சட்டமீறல்களை அனுமதிக்கிறது என்பதுதான்.

குறிப்பாக நன்கு ஏற்பாடு செய்யப்பட்ட இனவாத சதித்திட்டங்களை ஒரு கவசமாக கொண்டுள்ள இந்த குழுவை கையாள்வதற்கு அரசாங்கம் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால் நாடு தீவிரமான நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்க நேரிடலாம் அத்தகைய ஒரு நிலைக்கு நிச்சயம் அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டியிருக்கும்

அநேகமாக காளான்களைப் போல முளைத்திருக்கும் இந்த இனவாதக் குழுக்கள் அனைத்துமே முஸ்லிம்களைத்தான் இலக்கு வைத்துள்ளன – ஒருவேளை அவர்கள் அடிக்கடி திருப்பித்திருப்பி சொல்லிவரும் தத்துவமான “முதலில் நாங்கள் தமிழர்களைக் கையாள்வோம் பின்னர் முஸ்லிம்களைக் கவனித்துக் கொள்வோம்” என்பதை பின்பற்றத்தான் அதைச் செய்கிறார்கள் போல உள்ளது.

இப்போது எல்.ரீ.ரீ.ஈ தோற்கடிக்கப் பட்டுவிட்டது மற்றும் தமிழர்கள் அடங்கி விட்டார்கள், என்பதனால் தான் ஒருவேளை முழு நாட்டுக்குமே தாங்கள் கொண்டு வரப்போகும் பேரழிவை பற்றிக் கவலைப்படாமல் அவர்கள் தங்கள் கவனத்தை முஸ்லிம்கள் பக்கம் திருப்பி உள்ளார்கள்; இந்தச் சதித் திட்டம் அமெரிக்கா, பிரித்தானியா, ஐரோப்பா, என்பன ஒன்றாக இணைந்து, அரேபிய சர்வாதிகாரிகளுடன் கூட்டுச் சேர்ந்து பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்கிற போர்வையின் கீழ் இஸ்லாம் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் உலகளாவிய இஸ்ராயேலிய பிரச்சாரத்துடன் நன்கு பொருந்துகிறது.

சிங்கள இனவாத சக்திகளுக்கு நோர்வே ஊடாக இஸ்ராயேல் நிதியுதவி வழங்கி வருகின்றது என்கிற சந்தேகம் பரவலாக எழுந்துள்ளது, நாட்டிலுள்ள முஸ்லிம்கள் மீது அவர்கள் கொண்டுள்ள பகைமை தீவின் இனமோதலில் அவர்கள் தலையீடு செய்த நாள்முதலே நிரூபணமாகியுள்ளது.

உண்மையில் ஐதேக தலையில் கூட்டு அரசாங்கம் பதவியேற்றது முதல், தீவானது தனது கதவுகளை அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் ஐரோப்பா என்பனவற்றுக்கு பொதுவாகவும் மற்றும் குறிப்பாக இஸ்ராயேலுக்கும் மற்றும் அதன் பெருநிறுவனங்களின் ஒன்றியங்களுக்கும் விரியத் திறந்து விட்டுள்ளது, இந்த நாடுகள் வளரும் நாடுகளை உறிஞ்சுவது மட்டுமின்றி தங்கள் உலகளாவிய சதித்திட்டத்தின் ஒரு பகுதியாக முஸ்லிம்கள் மீதான தீய வடிவத்தை நடைமுறைப்படுத்தும் வாய்ப்பையும் ஒருபோதும் தவறவிடுவதில்லை.

இந்தக் காரணங்களினால்தான் மாடு வெட்டுவதை தடை செய்வதற்காக அதன் சமூக மத மற்றும் பொருளாதார நடைமுறைகளை கவனத்தில் கொள்ளாமல் ஜனாதிபதி சிறிசேன மேற்கொண்டுள்ள நகர்வையிட்டு முஸ்லிம்கள் மிகவும் கவலையடைகிறார்கள்.

இந்த தீர்மானம் ஹஜ் சமயத்தின் போது முஸ்லிம்கள் மேற்கொள்ளும் சமய கடமைகளின் அடித்தளத்தையே அசைத்துள்ளது. நாட்டில் ஒரு ஆட்சியாளர், முஸ்லிம்கள் மட்டுமன்றி ஆனால் பௌத்த சமயத்தவர்கள் உட்பட ஏனைய மதவிசுவாசிகளினதும் உணவை கட்டுப்படுத்தும் தனது நோக்கத்தை வெளிப்படையாகப் பிரகடனப் படுத்தியிருப்பது இதுதான் முதல் முறை.

ஒருவர் உண்ணும் உணவு, குடிக்கும் மது, தவறான பாலியல் உறவு, குதிரைப் பந்தயம் உட்பட அனைத்துவிதமான சூதாட்டங்கள், கசினோக்கள் மற்றும் இத்தகைய அனைத்து விதமான நடவடிக்கைகளும் ஒருவரது தனிப்பட்ட விருப்பம் மற்றும் விருப்பமின்மை என்பனவற்றில்தான் தங்கியுள்ளன. இத்தகைய மானிட ஆசைகளை சட்டத்தினால் கட்டுப்படுத்திவிட முடியாது.

மாட்டிறைச்சியை இறக்குமதி செய்வதற்கான பரிந்துரைகளும் உள்ளனவாம். இது ஒரு கேலிக்கூத்து, பசுக்களை வெளிநாடுகளில் வெட்டினால் அவை வலியை உணர மாட்டாதா.

மேலும் மாடுகள் வெட்டுவதை மட்டும் ஏன் நிறுத்த வேண்டும்? ஆடுகள், பன்றிகள், கோழிகள் மற்றும் ஏனைய வீட்டு பிராணிகள் போன்றவையும் வலிகளை உணர்வதால் அவைகளை வெட்டுவதையும் ஏன் நிறுத்தக்கூடாது என்று மக்கள் கேட்கத் தொடங்கியுள்ளார்கள்.

கேள்வி என்னவென்றால், அரசியல் ஸ்திரமின்மை மற்றும் துரதிருஸ்ட வசமாக நாடு சுதந்திரமடைந்து 68 வருடங்களின் பின்பும் தவறான நிர்வாக முறையால் இன்னும் வெளிநாடுகளையே நம்பியுள்ள தள்ளாடும் பொருளாதாரம் என்பனவற்றுடன் மோதல் நடத்தும் இந்த தீவு எதிர்நோக்கும் முக்கிய பிரச்சினை மாடு வெட்டுவதுதானா?

தற்போதைய அரசாங்கம் பதவிக்கு வருவதற்காக வாக்களிக்கப்பட்டது, குற்றம், ஊழல், நாட்டைக் கொள்ளையடித்தவர்கள் போன்ற அனைவரையும் நீதிக்கு முன் நிறுத்துவதற்காகவே. எனினும் ஒரு வருடம் நிறைவடைந்ததின் பின்பும் இந்த வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப் படாமல் இருப்பது மக்கள் மத்தியில் அவநம்பிக்கை எற்பட வழி வகுத்துள்ளது.

இந்த நேரம் வேண்டியது இந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவது, அரசியல் ஸ்திரத்தன்மையை நோக்கி வேலை செய்வது மற்றும் வேலையின்மை, உயரும் வாழ்க்கைச்செலவு, சட்டமீறல்கள் போன்ற இத்தகைய எரியும் பிரச்சினைகளைத் தணிப்பதற்கு உதவியாக பொருளாதாரத்தை மீளக்கட்டி எழுப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதேயாகும்.

பிரதான நிலையில் உள்ள சிங்களவர்களும் கூட இந்த இனவாத கூலிப்படைகளின் அச்சுறுத்தலில் இருந்து நாட்டைக் காப்பாற்ற முன்வர வேண்டும்.Post a Comment

Protected by WP Anti Spam