கவுதமாலாவில் இன்சூரன்சு தொகைக்காக பெற்றோரை கொலை செய்தவருக்கு 166 ஆண்டு சிறை…!!

Read Time:1 Minute, 35 Second

0f9c7a47-4d01-4349-82b8-6f0fa758e4b6_S_secvpfமத்திய அமெரிக்க நாடான கவுதமாலாவை சேர்ந்தவர், எட்கார் டி லியோன் ரோடாஸ் (வயது 32). இவரது பெற்றோரும், ஒரு சகோதரரும் கடந்த 2014-ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டனர். தந்தை மரணத்துக்காக ரோடாஸ் ஆயுள் காப்பீடு தொகையை பெற்றார். தாயாரின் மரணத்துக்காக அவர் ஆயுள் காப்பீடு தொகையை பெற முயற்சித்தபோதுதான், அவர் இன்சூரன்சு தொகையைப் பெறுவதற்கு தனது பெற்றோரையும், சகோதரரையும் கொலை செய்ததும், சம்பவத்தின்போது, அவரது 2 மகள்கள் காயம் அடைந்ததும் தெரிய வந்தது.

இதையடுத்து ரோடாஸ், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டார். பெற்றோரையும், சகோதரரையும் கொலை செய்ததற்காக அவர் மீது கவுதமாலா சிட்டி கோர்ட்டில் கொலை வழக்கு தொடரப்பட்டது.

விசாரணை முடிவில் அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதாக கருதிய கோர்ட்டு, அவருக்கு 166 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.

ஆனால் அந்த நாட்டின் சட்டப்படி அவர் அதிகபட்சமாக 50 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்தால் போதும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அமெரிக்காவில் பரவும் துப்பாக்கி கலாசாரம்: குடும்பத்தினரை சுட்டுக்கொன்றவர், தானும் தற்கொலை…!!
Next post சங்கரன்கோவிலில் நள்ளிரவில் வீடு இடிந்து விழுந்து தாய்– மகன் பலி…!!