நீர்வேலியில் சமூகச்சீரழிவை தடுத்து நிறுத்த முற்பட்டவர்களுக்கு வாள் வெட்டு…!!

Read Time:3 Minute, 53 Second

vaal_rowdyவலி.கிழக்கு பிர­தேச செய­லக பொலிஸ், பொது­மக்கள் நல்­லு­றவுக் கூட்­டத்தில் நீர்­வே­லியில் நடை­பெற்­று­வரும் சமூக விரோதச் செயலை கண்­டித்து கருத்து வெளி­யிட்டு அதனைத் தடுத்து நிறுத்தக் கோரிய நபர் மீது நேற்­று­முன்­தினம் நள்­ளி­ரவு வாள்கள்,

பொல்­லு­க­ளுடன் சென்ற கும்பல் வாள் வெட்டை மேற்­கொண்­ட­துடன் குறித்த நபரின் உற­வி­ன­ரையும் கடத்த முயற்­சித்­துள்­ளது.

இச்­சம்­பவம் தொடர்பில் மேலும் தெரி­ய­வரு­வ­தா­வது,

நீர்­வேலிப் பகு­தியில் கடந்த வாரம் நள்­ளி­ரவு சட்­ட­வி­ரோத மது விற்­பனை நிலையம் ஒன்­றி­லி­ருந்து மது அருந்­திய கும்பல் ஒன்றை அப்­ப­குதி இளை­ஞர்கள் பிடித்து பொலி­ஸா­ரிடம் ஒப்­ப­டைத்­துள்­ளனர்.

இந்­நி­லையில் குறித்த சம்­பவம் தொடர்­பிலும் அதற்கு முன்னர் நீர்­வேலிப் பகு­தியில் இடம்­பெற்ற சமூக விரோதச் செயல்கள் தொடர்­பிலும் கருத்­துக்­களை கடந்த திங்­கட்­கி­ழமை நடை­பெற்ற வலி.கிழக்குப் பிர­தேச செய­லக பொலிஸ், பொது மக்கள் நல்­லு­றவுக் கூட்­டத்தில் வாள் வெட்­டுக்கு இலக்­கான குறித்த நபர் தெரி­வித்து அவற்றை தடுத்து நிறுத்­தவும் அங்­குள்ள அதி­கா­ரி­க­ளிடம் கோரிக்கை விடுத்­தி­ருந்தார்.

இக்­க­லந்­து­ரை­யா­டலின் பின்னர் நீர்­வேலிப் பகு­தியில் இடம்­பெறும் திருட்­டுக்­க­ளையும் சமூக விரோதச் செயல்­க­ளையும் தடுப்­ப­தற்­காக அப்­ப­குதி மக்கள் இரவு வேளை விழிப்புக் குழு நட­வ­டிக்­கையில் ஈடு­பட்­டி­ருந்­தனர். இந்­நி­லை­யி­லேயே கடந்த செவ்­வாய்க்­கி­ழமை அப்­ப­கு­திக்கு தடிகள், பொல்­லுகள், வாள்­க­ளுடன் வந்த கும்பல் ஒன்று அங்கு நின்ற குறித்த நபர் மீது வாள் வெட்­டினை மேற்­கொண்­ட­துடன் அவரின் வீட்­டுக்குச் சென்று அவ­ரது உற­வி­ன­ரையும் கடத்த முற்­பட்­டி­ருந்­தனர்.

இதன்­போது அங்கு கூடிய பொது மக்­க­ளினால் குறித்த கும்பல் விரட்­டப்­பட்டு கடத்தல் முயற்­சியும் தடுக்­கப்­பட்­டி­ருந்­தது.

இத்­த­கைய சம்­ப­வங்கள் இடம்­பெற்­ற­த­னை­ய­டுத்து நீர்­வேலிப் பகுதி வாழ் மக்கள் ஒன்று திரண்டு நேற்­றைய தினம் காலை தமக்கு பாது­காப்பு வழங்­கக்­கோரி வலி.கிழக்குப் பிர­தேச செய­லகம் முன்­பாக கவ­ன­யீர்ப்­பினை மேற்­கொண்­டனர்.

இதன்­போது பிர­தேச செய­ல­கத்தின் செயலர் பிர­தீபன், மக்­க­ளுடன் கலந்­து­ரை­யாடி யாழ்.மாவட்ட அர­சாங்க அதி­ப­ரி­டமும் குறித்த பிரச்­சி­னையைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது குறித்த பிரச்சினைக்கு மாவட்ட பொலிஸ் அதிகாரியுடன் தொடர்பு கொண்டு பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுப்பதாக அரசாங்க அதிபர் உறுதி மொழி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வருகிறது புதிய கருத்தடை சாதனம்: ஆணுறை தேவை இல்லை – ஒரு ஊசி போதும்…!!
Next post கிளிநொச்சி ஏ9 வீதியில் கோர விபத்து…!!