கிளிநொச்சி ஏ9 வீதியில் கோர விபத்து…!!
Read Time:59 Second
கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
A9வீதியில் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்துக்கு அருகாமையில் மோட்டார் வாகனமும் மகேந்திரா பிக்கப் தர வாகனமும் ஒன்றுக்கொன்று மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தின் போது மோட்டார் வாகனத்தில் பயணம் செய்த சாரதி உட்பட இருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating