புதுவண்ணாரப்பேட்டையில் மெத்தை தயாரிக்கும் கம்பெனியில் தீ விபத்து…!!

Read Time:2 Minute, 0 Second

201609091206050537_new-washermanpet-mattress-company-fire-accident_secvpfபுதுவண்ணாரப்பேட்டை சேனியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் துரை. அதே பகுதியில் மெத்தை, தலையணை தயாரிக்கும் கம்பெனி நிறுவனம் நடத்தி வருகிறார். 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். நேற்று இரவு வேலை முடிந்து நிறுவனத்தை பூட்டி சென்றனர்.

இந்த நிலையில் இன்று அதிகாலை 3 மணியளவில் பூட்டி கிடந்த நிறுவனத்தில் இருந்து கரும்புகை வெளியேறியது. சிறிது நேரத்தில் தீ மளமளவென பற்றி எரிந்தது.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். ராயபுரம், எஸ்பினேடு, தண்டையார்பேட்டையில் இருந்து 3 வண்டிகள் விரைந்து வந்தன.

மெத்தை தயாரிக்க வைத்திருந்த பஞ்சுகள் தீப்பற்றி எரிந்ததால் உடனடியாக தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. சுமார் 2 மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் தீணை அணைத்தனர்.

எனினும் அங்கிருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமானது. சேத மதிப்பு பல லட்சம் இருக்கும்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உடல் எடையை குறைக்கும் டீ…!!
Next post நாமக்கல் அருகே தேர்வு எழுத அனுமதிக்காததால் 10-ம் வகுப்பு மாணவன் தற்கொலை முயற்சி…!!