அதிக வருவாய் ஈட்டும் டி.வி. நடிகைகள் பட்டியலில் இடம் பிடித்த பிரியங்கா சோப்ரா…!!

Read Time:2 Minute, 54 Second

201609160941553276_higher-income-on-tv-list-of-favorite-actresses-priyanka_secvpfசர்வதேச அளவில் அதிக வருவாய் ஈட்டும் டி.வி. நடிகைகள் பட்டியல் ஒன்றை போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் இடம் பிடித்த முதல் இந்தியர் என்ற பெருமையை பிரபல இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா பெற்றுள்ளார்.

அமெரிக்க வணிக பத்திரிக்கை போர்ப்ஸ், ஆண்டு வருவாய் அடிப்படையில் உலகில் முன்னணி டி.வி நடிகைகள் 15 பேர் அடங்கிய பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் முதல் இந்திய நட்சத்திரமாக பிரியங்கா சோப்ரா இடம் பிடித்துள்ளார். இந்த பட்டியலில் அவர் 8-வது இடத்தில் இருக்கிறார். இவரது ஆண்டு வருவாய் 1.10 கோடி டாலராக உள்ளது. இவர் அமெரிக்காவில் “குவாண்டிகோ” டி.வி. தொடரில் நடித்து புகழ் பெற்றுள்ளார்.

அமெரிக்க டி.வி. நடிகையான சோபியா வெர்காரா (44) இந்த பட்டியலில் முதல் இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார். இவர் கடந்த ஐந்து ஆண்டுகளாக தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறார். இவரது ஆண்டு வருவாய் 4.3 கோடி டாலராகும்.

அடுத்து “தி பிக் பாங் தியரி” டி.வி. தொடரின் நடிகை கலே குயோகோ, 2.45 கோடி டாலர் வருவாயுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். 1.5 கோடி டாலர் வருவாயுடன் மிண்டி கலிங் 3-வது இடத்தில் உள்ளார். எல்லன் பாம்பியோ மற்றும் மாரிஸ்கா ஹர்கிட்டே ஆகிய டி.வி நடிகைகள் தலா 1.45 கோடி டாலர் வருவாய் ஈட்டி 4-வது இடத்தை பிடித்துள்ளனர்.

1.35 கோடி டாலர் வருவாயுடன் ஆறாவது இடத்தில் கெர்ரி வாஷிங்டன் உள்ளார். ஸ்டனா கேட்ரிக் ஏழாவது இடத்தில் இருக்கிறார். இவரும் பிரியங்கா சோப்ரா போலவே முதன் முதலில் இப்பட்டியலில் இடம் பெறும் பிரபல டி.வி. நடிகை என்பது குறிப்பிடத்தக்கது.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சில்லுகள் இன்றி தரையிறங்கிய விமானத்தின் திக் திக் நிமிடம்..!! வீடியோ
Next post ஏ.ஆர்.முருகதாஸ் உதவியாளர் இயக்கும் விதி-மதி உல்டா…!!