ஏ.ஆர்.முருகதாஸ் உதவியாளர் இயக்கும் விதி-மதி உல்டா…!!

Read Time:2 Minute, 42 Second

201609161142258373_ar-murugadoss-assistant-direct-new-movie_secvpfபிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸின் உதவியாளர் ஒருவர் இயக்கும் படத்திற்கு ‘விதி-மதி உல்டா’ என்று பெயர் வைத்துள்ளனர். அந்த படம் குறித்த செய்தியை கீழே பார்ப்போம்.

டார்லிங்-2 படத்தின் கதாநாயகன் ரமீஸ் ராஜா மீண்டும் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் ‘விதி-மதி உல்டா’. இப்படத்தை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவியாளராக பணியாற்றிய விஜய் பாலாஜி என்பவர் இயக்குகிறார். இப்படத்தில் ரமீஸ் ராஜாவுக்கு ஜோடியாக ஜனனி ஐயர் நடிக்கிறார். மேலும், டேனியல் பாலாஜி, கருணாகரன், சென்ட்ராயன், சித்ரா லட்சுமணன், ஞானசம்பந்தம் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

மனிதன் கனவில் காண்கின்ற காட்சிகளெல்லாம் நிஜமாகி நேரில் வந்தால் மனித வாழ்க்கையே விபரீதமாகிவிடும். அந்த விபரீதமே விதியானால் அந்த விதியை மதியால் வெல்லமுடியுமா? முடியாதா? என்ற கேள்விக்கான விளக்கம்தான் இப்படத்தின் கதையாகும்.

இப்படம் காமெடி கலந்த திரில்லர் கதையாக உருவாகி இருக்கிறது. இப்படத்திற்கு அஸ்வின் இசையமைத்திருக்கிறார். இவருடைய இசையில் பிரபல இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் ஒரு பாடல் பாடியுள்ளார். மேலும், கானா பாலா, அந்தோணி தாஸ் உள்ளிட்டோரும் பாடல் பாடியுள்ளனர்.

இப்படத்திற்கான அனைத்துக்கட்ட படப்பிடிப்புகளும் தமிழ்நாடு, கேரளா, பாண்டிச்சேரி ஆகிய இடங்களில் நடந்து வருகிறது. மார்ட்டின் ஜோ என்பவர் ஒளிப்பதிவு செய்கிறார். ரைட் மீடியா ஒர்க்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அதிக வருவாய் ஈட்டும் டி.வி. நடிகைகள் பட்டியலில் இடம் பிடித்த பிரியங்கா சோப்ரா…!!
Next post தீராத நோய்களை தீர்க்கும் அருகம்புல்…!!