கருணாஅம்மான் தரப்பினரின் முகாம் தாக்குதல் முறியடிப்பு
மட்டக்களப்பின் எல்லைப் பகுதியான கந்தான்காடு பகுதியில் இன்று அதிகாலை 1.20மணியளவில் பால்ராஐ நாகேஸ் ஆகியோரின் தலைமையில் வந்த சுமார் முந்நூறுக்கும் மேற்பட்ட வன்னிப்புலிகள் கருணாஅம்மான் தலைமையிலான தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகளின் தளபதிகளான ரீஐசீலன், சின்னத்தம்பி ஆகியோர் தலைமையில் இருந்த இரண்டு முகாங்களை தாக்குவதற்கு முற்பட்டவேளை தமிழீழ மக்கள் விடுதலைப்புலிகள் மேற்கொண்ட பதில் தாக்குதலில் வன்னிப்புலிகள் தரப்பில் பலர் கொல்லப்பட்டுள்ளதாகவும் இத்தாக்குதல் சுமார் ஒருமணிநேரம் நீடித்துள்ளதாகவும் அதிரடி இணையத்தளத்தின் மட்டக்களப்பு நிருபர் அனுப்பி வைத்துள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அச்செய்தியில் இத்தாக்குதலின் போது கருணாஅம்மானின் தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகள் தரப்பில் இதுவரை ஐவர் பலியாகியுள்ளதுடன், அறுவர் படுகாயமடைந்துள்ளனர். தாக்குதலின் இறுதியில் பெருந்தொகையான ஆயுதங்களையும், ஏழு வன்னிப்புலிகளின் சடலங்களையும் கைவிட்டுவிட்டு வன்னிப்புலிகள் தப்பியோடியுள்ளனர். சகல ஆயுதங்களும், கைவிடப்பட்ட ஏழு வன்னிப்புலிகளின் சடலங்களும் தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. வன்னிப்புலிகளின் சடலங்களை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊடாக புலிகளிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகள் மேற்கொள்ளவுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தாக்குதல் இடம்பெற்ற இடம் வெலிகந்தையிலிருந்து 5கிலோமீற்றர் தொலைவிலும், கட்டுமுறிவிலிருந்து 9கிலோமீற்றர் தொலைவிலும் உள்ள காட்டுப்பகுதியான இடமாகும். இத்தாக்குதல் குறித்த முழுமையான விபரம் பின்னர் தரப்படும்.
Average Rating