காச நோயை விரட்டும் கற்ப மூலிகை எது?

Read Time:3 Minute, 13 Second

tb-27-1469611698-585x439உலகில் காடுகளிலும் மலைகளிலும் பல ஆயிரக்கணக்கான மூலிகை செடிகள் உள்ளன. அவைகள் ஏதாவது ஒரு வகையில் மனிதர்களுக்கு பயன்ப்டத்தான் இயற்கை படைத்திருக்கிறது.
உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும் அரிய குணங்களை கொண்ட மூலிகைகளை கற்ப மூலிகைகள் என்பார்கள்.

இந்த வகையைச் சேர்ந்த பல மூலிகைகள் நம்மை நீண்ட ஆயுளோடு வாழ வைக்கும். நம்மை ஆரோக்கியப்படுத்தும் மூலிகைகளை கற்ப மூலிகைகள் என்பார்கள். அந்த வகையான கற்ப மூலிகை இங்கு காண்போம்.

கண்டங்கத்திரி :

கண்டங்கத்திரி படர்செடி வகையைச் சார்ந்தது. இது எல்லா இடங்களிலும் செழித்து வளரும் தன்மை கொண்டவை.

இதன் இலை, பூ, காய் பழம், விதை, வேர் அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டவை. கார்ப்புச் சுவை கொண்ட இது சித்த, ஆயுர்வேத மருத்துவ முறைகளில் அதிகம் சேர்க்கப்படுகிறது.

காச நோய்க்கு :

நுரையீரலில் உண்டான அலர்ஜியால், ஜலதோஷம், மூச்சிரைப்பு, ஆஸ்துமா மற்றும் இதன் தீவிரத்தால் காச நோயும் வருகிறது.

காச நோயை குணமாக்கும் ஆற்றலை கண்டங்கத்திரி கொண்டுள்ளது. கண்டங்கத்திரி, தூவளை மற்றும் ஆடாதொடை ஆகியவற்றை சம அளவு எடுத்து, இடித்து நீரில் கொதிக்க வைத்து, வடிகட்டி இந்த கசாயத்தை காலை மாலை குடித்தால் காச நோய் சரியாகிவிடும்.

தலையில் நீர் கோத்து கொள்வதற்கும், வறட்டு இருமலுக்கு கண்டங்கத்திரி பயன்படுகிறது.
கண்டங்கத்திரி ரத்தக் குழாய்களில் உண்டாகும் கொழுப்பு அடைப்புகளையும் நீக்கும் தன்மை உண்டு. அதேபோல் மார்புச் சளியை நீக்கி குரல்வளையில் தேங்கிநிற்கும் சளியை நீக்கி சுவாசத்தை சீராக்கும்.
கண்டங்கத்திரி இலையின் சாற்றை தேங்காய் எண்ணெயுடன் கலந்து கொதிக்க வைத்து ஆறிய பின் பூசி வந்தால் வியர்வை நாற்றம் நீங்கும். தலைவலி, சரும பாதிப்பு இவைகளுக்குபற்று போட்டால் நிவாரணம் உடனடியாக கிடைக்கும்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெண்களை மையப்படுத்தி படம் எடுக்கும் ஐஸ்வர்யா தனுஷ்…!!
Next post விஜய் நடிக்கும் ‘பைரவா’ பற்றி தெரியாத சில தகவல்கள்…!!