விஜய் நடிக்கும் ‘பைரவா’ பற்றி தெரியாத சில தகவல்கள்…!!
விஜய் நடிப்பில் பரதன் இயக்கும் ‘பைரவா’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். மேலும், சதீஷ், டேனியல் பாலாஜி, ஸ்ரீமன், ஜெகபதி பாபு, ஒய்.ஜி.மகேந்திரன், பாப்ரி கோஷ், அபர்ணா வினோத், ஹரிஷ் உத்தமன், ஆடுகளம் நரேன், விஜய் ராகவன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
இது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான் என்றாலும், இப்படம் பற்றிய பலருக்கும் தெரியாத சில தகவல்கள் வெளியாகியுள்ளன. அது என்னவென்பதை கீழே பார்ப்போம்.
‘பைரவா’ படத்தின் கதை கேரளாவில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகி வருகிறதாம்.
இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிகை பாப்ரி கோஷ் நடிக்க விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர்தான் பரிந்துரை செய்தாராம். பாப்ரி கோஷ், எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் வெளிவந்த ‘டூரிங் டாக்கீஸ்’ படத்தில் கதாநாயகியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
‘பைரவா’ படத்தில் எக்காரணத்தை கொண்டும் பஞ்ச் டயலாக் இருக்கக்கூடாது என்று இயக்குனரிடம் விஜய் கேட்டுக் கொண்டாராம். அதேநேரத்தில் ஒவ்வொரு வசனமும் பவர் புல்லாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளாராம்.
இப்படத்தில் விஜய் கிராமத்து இளைஞர் மற்றும் மெடிக்கல் கல்லூரி மாணவர் என இரண்டு வித்தியாசமான வேடங்களில் நடித்துள்ளார்.
மற்ற படங்களைப் போலவே விஜய் இந்த படத்தில் ஒரு பாடல் பாடவுள்ளார். அந்த பாடலை விரைவில் ஒலிப்பதிவு செய்யவுள்ளனர்.
கபாலி படத்தில் நடித்த ‘மைம்’ கோபி இந்த படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.
Average Rating