அங்கொட மனநோயாளர் வைத்தியசாலையில் பணியாற்றும் தாதியர்களின் நிலை?

Read Time:2 Minute, 27 Second

625-117-560-350-160-300-053-800-210-160-90-2அங்கொட மனநோயாளர் வைத்தியசாலையில் கடமையாற்றி வரும் தாதியரில் அதிகமானோருக்கு உரிய பயிற்சி வழங்கப்படவில்லை என அரச தாதியர் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடுகையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்…

மன நோயாளிகளை பராமரிப்பதற்கான விசேட பயிற்சிகள் அற்ற 70வீதமான தாதியர் வைத்தியசாலையில் கடமையாற்றி வருகின்றனர்.

மனநோய் வைத்தியசாலையில் மொத்தம் 380 தாதியர் கடமையாற்றி வருகின்றனர், இதில் 266 பேர் பயிற்சி அற்றவர்களாவர்.

தங்கியிருந்து சிகிச்சை பெறும் நோயாளிகள் தாதியரை தாக்கும் சம்பவங்கள் வருடத்தில் குறைந்த பட்சம் 15 சம்பவங்கள் பதிவாகின்றன.

கடமையாற்றி வரும் தாதியருக்கு போதியளவு பயிற்சி வழங்கினால் தாக்குதல்கள் மற்றும் ஏனைய சிக்கல்களிலிருந்து தப்பித்துக்கொள்ள முடியும்.

வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக் கொள்வோர் சாதாரண நோயாளிகள் அல்லர் அவர்களுக்கு சேவையாற்றுவதற்கு விசேட பயிற்சி அவசியமாகின்றது.

இரவு காவல் பணிகளிலும் இரண்டு தாதியர் மட்டுமே கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

50க்கும் மேற்பட்ட நோயாளிகளை கட்டுப்படுத்த இவர்களினால் முடியாத நிலைமை காணப்படுகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post யாழில் குடும்பஸ்தர் அடித்துக் கொலை ; 6 பேருக்கு பிணை…!!
Next post ஜப்பானில் கடலுக்கு அடியில் இன்று நிலநடுக்கம்…!!