யாழில் குடும்பஸ்தர் அடித்துக் கொலை ; 6 பேருக்கு பிணை…!!

Read Time:5 Minute, 54 Second

index-150வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி மைதானத்தில் வைத்து குடும்பஸ்தர் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கின் 6 எதிரிகளையும் சரீரப் பிணையில் வெளிச் செல்வதற்காகு யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் அனுமதியினை வழங்கியுள்ளார்.

சாட்சியங்கள் அச்சுறுத்தப்பட்டாலே, வழக்கில் தேவையற்ற தலையீடுகளில் ஈடுபட்டாலே வழக்க்கு முடியும்வரைக்கும் சிறைத்தண்டணை அனுபவிக்க நேரிடும் என்றும் நீதிபதி அவர்களை கடுமையாக எச்சரிக்கை செய்துள்ளார்.

கடந்த 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 14 ஆம் திகதி வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்கும் சென்பற்றிஸ் கல்லூரிக்கும் இடையில் நடைபெற்ற கிரிக்கட் போட்டியின் போது தனுசன் (அமலன்) என்பவர் கொலை செய்யப்பட்டிருந்தார்.

இக் கொலை சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் 6 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு எதிராக மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணைகளின் அறிக்கை சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டது.

சட்டமா அதிபர் திணைக்களத்தினால் இவ்வழக்கு யாழ்.மேல் நீதிமன்றத்தில் பாரப்படுத்தப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் குறித்த வழக்கு யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன் போது சந்தேக நபர்கள் 6 பேரும் மன்றில் ஆஜராகியிருந்தனர். சட்டமா அதிபர் திணைக்களத்தின் அரச சட்டவாதியும் மன்றில் தோண்றியிருந்தார்.

இவ்வழக்கின் 1,2,3,4,6, ஆம் சந்தேக நபர்கள் சார்பில் சட்டத்தரணி க.சுகாஸ் மன்றில் தோண்றியிருந்தார். 5 ஆம் சந்தேக நபர் சார்பில் கௌதமன் மன்றில் தோன்றியிருந்தார்.

வழக்கின் போது மன்றில் ஆஜராகியிருந்த சந்தேக நப்கள் 6 பேருக்கும் குற்றம் நடக்கும் என்பதை அறிந்திருந்தமை, குற்றத்தினை புரிந்தமை மற்றும் மரணத்தினை விளைவித்தமை போன்ற தனித்தனியாக சுமத்தப்பட்டதும், கூட்டாக சுமத்தப்பட்ட குற்றங்கள் அடங்கிய குற்றப்பகிர்வு பத்திரம் மன்றில் வைத்து ஒவ்வொருவருக்கும் வழங்கப்பட்டு படித்தும் காண்பிக்கப்பட்டது.

குற்றப்பகிர்வு பத்திரம் வாசித்துக் காண்பிக்கப்பட்டும், சந்தேக நபரகளிடம் கையளிக்கப்பட்ட பின்னரும் 6 சந்தேக நபர்களிடத்திலும் தனித்தனியாக நீங்கள் குற்றவாளியா? சுற்றவாளியா? ஏன நீதிபதியால் கேட்கப்பட்டது. இதற்கு 6 சந்தேக நபர்களும் தான் சுற்றவாளிகள் என்று கூறியிருந்தனர்.

இந்நிலையில் 6 சந்தேக நபர்களையும் 50 ஆயிரம் ரூபா சரீரப் பிணையில் வெளியில் செல்வதற்கான அனுமதியினை நீதிபதி வழங்கியிருந்தார். அத்துடன் 6 பேரினது கைவிரல் அடையாளங்களை பதிவு செய்யுமாறும் நீதவான் பணித்திருந்தார்.

மேலும் எந்த சந்தர்ப்பத்திலும் வழக்கின் சாட்சியங்களுடன் தலையீடுகள் எதேனும் செய்வீர்களானால் வழக்கு விசாரணைகள் முடியும் வரைக்கும் சிறையில் இருக்க வேண்டிய நிலை ஏற்படும்.

சாட்சியங்கள் சுதந்திரமாக இருக்க வேண்டும், பிணையில் வெளிச் செல்பவர்கள் சாட்சியங்களின் முகங்களையே பார்க்க வேண்டாம் எனவும் கடுமையாக எச்சரிக்கை செய்தார். மேலும் எதுவாக இருந்தாலும் உங்களுடைய சட்டத்தரணிகள் ஊடாக உங்களுடைய வாதங்களை முன்வைக்க முடியும். அதற்கான சுதந்திரத்தினை மன்று வழங்கும்.

குறித்த வழக்கு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 26,27,28 ஆம் திகதிகளில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும். இதன் போது வழக்கின் 16 சாட்சிகளையும் மன்றில் ஆஜராகுமாறும் நீதிபதி உத்தரவு பிறப்பித்திருந்தார்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விபரீதத்தில் முடிந்த வேடிக்கை: பலரை பதம் பார்த்த கார்…!! வீடியோ
Next post அங்கொட மனநோயாளர் வைத்தியசாலையில் பணியாற்றும் தாதியர்களின் நிலை?