சிவகார்த்திகேயன் படத்தில் பிரகாஷ் ராஜ்…!!

Read Time:2 Minute, 25 Second

201609221551049789_prakash-raj-plays-pivotal-role-in-sivakarthikeyan-next_secvpfசிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது ‘ரெமோ’ படம் உருவாகி ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. இப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன், மோகன் ராஜா இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ள நிலையில், இப்படத்தில் நடிக்கும் பிற நடிகர், நடிகையர் தேர்வு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நயன்தாரா நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது இப்படத்தில் பிரகாஷ் ராஜ் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அவர் எந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறித்து தகவல் எதுவும் வெளிவரவில்லை.

ஏற்கனவே மோகன் ராஜா இயக்கிய படங்களான ‘எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி’, ‘சந்தோஷ் சுப்ரமணியம்’ ஆகிய படங்களில் பிரகாஷ் ராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படங்களில் பிரகாஷ் ராஜின் கதாபாத்திரம் அதிகம் பேசப்பட்டது. தற்போது மூன்றாவது முறையாக மோகன் ராஜாவுடன் இணைந்திருக்கிறார் பிரகாஷ் ராஜ். இப்படத்திலும் பிரகாஷ் ராஜின் கதாபாத்திரம் அனைவராலும் வரவேற்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இப்படத்தை 24AM ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் ஆர்.டி.ராஜா பிரம்மாண்டமாக தயாரிக்கிறார்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கடைக்குச் சென்ற பெண் சடலமாக மீட்பு…!!
Next post மாஸ்கோ தீவிபத்தில் சிக்கி 8 தீயணைப்பு படை வீரர்கள் பரிதாப பலி…!!