ஒன்றரை வயது மகள், மனைவி, மாமனாரை கொடூரமாக கொலை செய்தவருக்கு விளக்கமறியல்..!!

Read Time:2 Minute, 48 Second

625-117-560-350-160-300-053-800-210-160-90மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காக்காச்சிவட்டை பகுதியில் 24.07.2016 அன்று அதிகாலை ஒரு மணியளவில் பேரின்பம் விஜித்தா (24), பிரசாந்தன் சஸ்னிகா (18 மாதங்கள்) மற்றும் கந்தையா பேரின்பம் (56) ஆகியோர் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.

குறித்த வழக்கு தொடர்பில் கைதுசெய்யப்பட்டவரை எதிர்வரும் 06ஆம் திகதி வரை விளக்கமறியில் வைக்குமாறு களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதிமன்ற நீதிபதி எம்.ஐ.எம்.றிஸ்வி உத்தரவிட்டுள்ளார்.

நேற்றைய தினம் இந்த வழக்கு களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த விளக்கமறியல் நீடிப்பு உத்தரவினை பிறப்பித்துள்ளார்.

அத்துடன் கொலை செய்யப்பட்ட இடத்தில் பெறப்பட்ட தடயப் பொருட்களையும் உடல் பாகங்களையும் இராசயனப் பகுப்பாய்வுக்கு அனுப்பிவைக்கு மாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

சம்பவம் இடம் பெற்ற தினம் அன்று மனைவியும் குழந்தையும் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த வேளையில் வீட்டிற்குள் புகுந்த விஜித்தாவின் கணவரான பிரசாந்தன் (34) விஜித்தாவையும் அவரது ஒன்றரை வயதுக் குழந்தையையும் வெட்டிக் கொலை செய்து வீட்டுக் கிணற்றில் வீசியிருந்தார்.

அதன் பின்னர் விஜித்தாவின் தந்தையினையும் வெட்டிக்கொலை செய்ததாக பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் விஜித்தாவின் கணவரான பிரசாந்தன் கைதுசெய்யப்பட்டு வழக்கானது களுவாஞ்சிகுடி நீதிமன்றில் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இளம்பெண்களின் தெறிக்கவிடும் நடனம்… செம்ம சூப்பரான காட்சி…!!
Next post மேசன் வேலைக்கு சென்றவர் விபத்தில் பலி…!!