மேசன் வேலைக்கு சென்றவர் விபத்தில் பலி…!!

Read Time:2 Minute, 14 Second

625-117-560-350-160-300-053-800-210-160-90-1அம்பாறை-பொத்துவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோமாரி ஹளுகொல்லப் பகுதியில் மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளதுடன், மற்றுமொருவர் காயமடைந்த நிலையில் கோமாரி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்து ,நேற்று (22) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளார்.

பொத்துவில் பிரதேசத்தில் மேசன் வேலையை முடித்துவிட்டு விநாயகபுரத்திலுள்ள அவரது வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் திரும்பிக்கொண்டிருந்தபோது, பஸ்ஸொன்றுக்கு இடம் விட முற்பட்டதாகவும் இதன்போது, வீதி வளைவுக்கு அருகில் இருந்த கம்பமொன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில், விநாயகபுரத்தைச் சேர்ந்த சிவகுமார் புஸ்பராசா (வயது 30) என்ற குடும்பஸ்தர் பலியாகியுள்ளார்.

இதேவேளை, படுகாயமடைந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய உதயகுமார் தீபன் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஒன்றரை வயது மகள், மனைவி, மாமனாரை கொடூரமாக கொலை செய்தவருக்கு விளக்கமறியல்..!!
Next post கொழும்பில் பாரிய வாகன நெரிசல் – மக்கள் பெரும் சிரமம்…!!