மறுமணம் செய்த போலீஸ் கணவன் முகத்தில் ஆசிட் வீசிய மனைவி…!!

Read Time:2 Minute, 2 Second

201609232019350784_woman-throws-acid-on-husband-for-remarrying_secvpfஜம்முவின் கதுவா மாவட்டம் பானி நகரத்தை சேர்ந்த ஷமீனா அக்தர்-மொஹம்மது டின் தம்பதியினருக்கு திருமணமாகி 10 வருடங்கள் ஆகின்றன. இத்தம்பதியினருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் கான்ஸ்டபிளாக பணியாற்றி வரும் மொஹம்மது டின் சமீபத்தில் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இதனால் ஆத்திரமடைந்த ஷமீனா தனது மகள் மற்றும் வேறு இருவரின் துணையுடன் அவரின் முகத்தில் ஆசிட் வீசிவிட்டார்.

இந்த ஆசிட் வீச்சில் மொஹம்மது பலத்த காயமடைந்தார். ஷமீனாவிற்கும் காயமேற்பட்டது. கணவன் – மனைவி இருவரும் கதுவா மாவட்ட துணை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் மொஹம்மதுவின் உடல்நிலை மிகவும் மோசமாகியதால் தற்போது அவரை கதுவா மாவட்ட மருத்துவமனைக்கு மாற்றியுள்ளனர்.

இதுகுறித்து பானி நகர போலீஸ் அதிகாரி சுரேஷ் கவுதம் கூறுகையில் “ஷமீனா மீது வழக்குப்பதிவு செய்துள்ளோம். மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியதும் ஷமீனா கைது செய்யப்படுவார். அவரது மகள் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளோம்’’ என்றார்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தங்கை தற்கொலை : காதலனை கொன்ற சகோதரன்…!!
Next post மகனின் கள்ளத்தொடர்பைக் கண்டித்த மருமகள்: கொடுமைப்படுத்திய ஐ.பி.எஸ். மாமனார்…!!