பயணம் செய்ய வேண்டிய விமானத்தை தவறவிட்டதால் ஓடுபாதையில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்திய தம்பதி…!!
சீனாவைச் சேர்ந்த ஒரு தம்பதியினர் தாம் பயணம் செய்யவிருந்த விமானத்தை தவறவிட்டதால், அவ்விமானம் புறப்படுவதை தடுப்பதற்காக விமான ஓடுபாதையில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.
பெய்ஜிங் சர்வதேச விமான நிலயைத்தில் அண்மையில் இச்சம்பவம் இடம்பெற்றது.
ஷாங்காய் நகருக்குச் செல்லும் பிளைட் சி.ஏ.1519 விமானத்தில் இத் தம்பதியினர் பயணம் செய்யவிருந்தனர்.
காலை 9.30 மணிக்கு இவ்விமானம் புறப்படவிருந்தது. ஆனால், பயணிகளுக்கான இறுதி அழைப்பின் பின்னரும் இவர்கள் விமானத்தில் ஏறவில்லை.
தாம் விமானத்தை தவறவிட்டதை உணர்ந்த இத்தம்பதியினர் விமான ஓடுபாதைக்குள் புகுந்து விமானத்தின் அடிப்பகுதியில் அமர்ந்து கொண்டு, விமானம் புறப்படுவதை தடுத்தனர். விமானத்தில் ஏற வேண்டிய நேரம் தமக்குத் தெரிவிக்கப்படவில்லை என அவர்கள் கூறினர்.
பின்னர் இத்தம்பதியினரை பொலிஸார் கைது செய்தனர். மேற்படி விமானம் 20 நிமிட தாதமதத்தின் பின் புறப்பட்டுச் சென்றது.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.
Average Rating