கைவிலங்கிடப்பட்ட நிலையில் பொலிஸாரின் காரை கடத்திச் சென்ற கைதி….!!

Read Time:2 Minute, 17 Second

1946727கொள்ளைக் குற்­றச்­சாட்டில் கைது செய்­யப்­பட்ட நபர் ஒருவர், கைவி­லங்­கி­டப்­பட்ட நிலை­யிலும் பொலி­ஸாரின் காரை கடத்திக் கொண்டு தப்பிச் சென்ற சம்­பவம் அமெ­ரிக்­காவில் அண்­மையில் இடம்­பெற்­றது.

இண்­டி­யானா மாநி­லத்­தி­லுள்ள டெரே ஹோட் நகரில் கொடி ட்ரையொன் (28) எனும் இளை­ஞரை கொள்ளைக் குற்­றச்­சாட்டின் கார­ண­மாக பொலிஸார் கைது செய்­தி­ருந்­தனர்.

அதன் பின்னர், கொடி ட்ரையோனின் கைகளை அவரின் முதுக்குப் பின்னால் வைத்து கைவி­லங்­கிட்டு, பொலிஸ் ரோந் துக் காரின் பின்­புற ஆச­னத்தில் ஏற்­றினர்.

அதன்பின் அவரை காரில் தனி­யாக விட்­டு­விட்டு பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்கள் அப்பால் சென்­ற­போது, காருக்குள் முன்­புற, பின்­புற ஆச­னங்­க­ளுக்கு இடை­யி­லுள்ள உலோகத் தடுப்பை எப்­ப­டியோ உடைத்த கொடி ட்ரையோன் அந்த காரை செலுத்திச் சென்றார் என டெரே ஹோட் நகர பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர்.

பின்னர் ஜி.பி.எஸ். சாத­னத்தின் உத­வி ­யுடன் மேற்­படி காரை பொலிஸார் கண்­டு­பி­டித்­தனர். அக்­காரை பொலிஸ் வாக­னங்கள் சுற்றி வளைத்­த­போது, கொடி ட்ரையோன் பல வாக­னங்­களை மோதித்தள்ளினார்.

இறுதியில் அவரை பொலிஸார் மீண்டும் கைது செய்தனர்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பயணம் செய்ய வேண்டிய விமானத்தை தவறவிட்டதால் ஓடுபாதையில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்திய தம்பதி…!!
Next post பாகிஸ்தானில் போர் விமானம் விழுந்து விபத்து: விமானி பலி…!!