கட்டுப்படுத்த முடியாத நிலையில் சர்க்கரை நோய் இருப்பவர்கள் தவிர்க்க வேண்டிய பழங்கள்…!!

Read Time:4 Minute, 9 Second

diabeticdiet-28-1469707157-585x439தற்போது இந்தியாவில் சர்க்கரை நோயின் தாக்கம் அதிகம் உள்ளது. நிறைய பேர் சர்க்கரை நோயினால் அவஸ்தைப்படுகிறார்கள். சர்க்கரை நோய் இருந்தால், உண்ணும் உணவுகளில் கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால், இரத்த சர்க்கரை அளவு அதிகரித்து, அதனால் நிலைமை மோசமாகக்கூடும்.

அதிலும் ஏற்கனவே கட்டுப்படுத்த முடியாத நிலையில் சர்க்கரை நோய் இருந்தால், அப்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இங்கு ஒருவருக்கு சர்க்கரை நோய் முற்றிய நிலையில் இருந்தால் சாப்பிடக்கூடாத சில பழங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. இந்த பழங்களை இரத்த சர்க்கரை அளவு கட்டுப்படும் வரை சாப்பிட வேண்டாம்.

மாம்பழம்

மாம்பழத்தில் கிளைசீமிக் இன்டெக்ஸ் 50-க்கும் அதிகமாக உள்ளதால், இரத்த சர்க்கரை கட்டுப்பாடின்றி அளவுக்கு அதிகமாக இருக்கும் போது, மாம்பழம் சாப்பிடுவதைத் தவிர்த்திடுங்கள். அதிலும் ஒரு நாளைக்கு 50 கிராமிற்கு மேல் சாப்பிடக்கூடாது. மேலும் உணவு உண்ட பின் உட்கொள்ளக்கூடாது. ஏனெனில் அதனால் இரத்த சர்க்கரை அளவு உயரக்கூடும்.

வாழைப்பழம்

வாழைப்பழத்தில் பொட்டாசியம் மற்றும் நேச்சுரல் சர்க்கரை உள்ளது. ஆகவே கட்டுப்பாடு இல்லாமல் சர்க்கரை நோய் இருக்கும் போது வாழைப்பழத்தை தவிர்ப்பது நல்லது. ஒருவேளை உங்களுக்கு இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டுடன் இருந்தால், ஒரு சிறிய வாழைப்பழத்தை வேண்டுமானால் சாப்பிடலாம்.

சீத்தாப்பழம்

இந்த பழத்தில் க்ளுக்கோஸ் அதிகமாக உள்ளதால், சர்க்கரை நோய் இருந்தால் இப்பழத்தை சாப்பிட வேண்டாம். என்ன தான் சர்க்கரை நோய் கட்டுப்பாட்டுடன் இருந்தாலும், எப்போதும் மிதமான அளவிலேயே இப்பழத்தை உட்கொள்ளுங்கள்.

சப்போட்டா பழம்

கட்டுப்பாடு இல்லாத சர்க்கரை நோய் இருப்பவர்கள், சப்போட்டாவை உட்கொள்ள கூடாது. ஒருவேளை இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டுடன் இருந்தால், ஒரு நாளில் 1/3 கப் அல்லது 80 கிராம் சப்போட்டா சாப்பிடலாம். அதற்கு மேல் சாப்பிட்டால், நிலைமை மோசமாகி பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

திராட்சை

சிட்ரஸ் பழங்களை சாப்பிட வேண்டுமானால், திராட்சைக்கு பதிலாக ஆரஞ்சு, சாத்துக்குடி போன்றவற்றை உட்கொள்ளலாம். இவைகள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதோடு, ப்ரீ-ராடிக்கல்களால் பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்கும். உங்களுக்கு இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டுன் இருந்தால், ஒரு நாளைக்கு வேண்டுமானால் 6-7 திராட்சை சாப்பிடலாம்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஜி.வி.பிரகாஷ் படத்தில் வடிவேலு…!!
Next post மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் பலி – வெவ்வேறு பகுதிகளில் சம்பவம்…!!