மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் பலி – வெவ்வேறு பகுதிகளில் சம்பவம்…!!

Read Time:3 Minute, 20 Second

625-117-560-350-160-300-053-800-210-160-90வவுனியா, மன்னார் வீதி, பம்பைமடு பகுதியில் தனியார் பேருந்தும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் மரணமடைந்துள்ளதாக பூவரசன்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று காலை இடம்பெற்ற இவ்விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது,

தனியார் பேருந்து ஒன்றின் முன்னால் வேகமாகச் சென்ற இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்து நிறுத்தியபோது அதனை விலத்தி முந்திச் செல்ல முற்பட்ட தனியார் பேருந்து எதிரில் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதால் இவ்விபத்து ஏற்பட்டது.

இதேவேளை, விபத்து இடம்பெற்றதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயமடைந்து பூவரசன்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

உயிரிழந்தவர் பெரியதம்பைனையைச் சோந்த ஏ.இராமசந்திரன் (வயது 64) என்பவராவார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பூவரசன்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகிறார்கள்.

பொத்துவில் விபத்தில் இளைஞன் பலி

அம்பாறை பொத்துவில் பிரதேசத்தில் நடந்த வாகன விபத்தில் இளைஞர் உயிரிழந்துள்ளார்.

பாணமவில் இருந்து திருக்கோவில் நோக்கி சென்றுக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி பாலத்தில் மோதியத்தில் இருந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞன் பொத்துவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

அபேசிங்கபுர என்ற பகுதியைச் சேர்ந்த 21 வயதான இளைஞனே சம்பவத்தில் பலியாகியுள்ளார்.

வேகத்தை கட்டுப்படுத்த முடியாத காரணத்தினால் இந்த விபத்து ஏற்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியந்துள்ளது.

இளைஞனின் சடலம் பொத்துவில் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பொத்துவில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கட்டுப்படுத்த முடியாத நிலையில் சர்க்கரை நோய் இருப்பவர்கள் தவிர்க்க வேண்டிய பழங்கள்…!!
Next post தாயின் சடலத்தை எரிக்க விறகின்றி தவித்த மகள்கள்! வீட்டுக் கூரையை பிரித்து அதில் எரித்த சோகம்…!!