குளிர் காலத்திலும் முகம் மின்ன வேண்டுமா? வேப்பிலையை பயன்படுத்துங்கள்…!!

Read Time:5 Minute, 51 Second

hairgrowth-585x439குளிர்காலத்தில்தான் சருமத்தில் நிறைய சுருக்கங்களும் வறட்சியும் அதிகரிக்கும். அதனை அந்த சமயங்களில் கவனிக்காவிட்டால், பின்னர் சருமத்தில் பாதிப்புகள் உண்டாகி அதனை சரிப்படுத்த முடியாமலே போகும்.

அதனால் மற்ற காலங்களை விட குளிர் மற்றும் மழை காலத்தில் சருமத்தை பாதுகாப்பது அவசியம். குளிர்கால குறிப்புகள் உங்களுக்கு ஏற்றவாறு இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. இவற்றை பயன்படுத்தி உங்கள் சருமத்தை பாதுகாத்திடுங்கள்.
முகம் என்றும் இளமையாக இருக்க:

முழு பச்சைபயிறு, கடலை பருப்பு, கஸ்தூரி மஞ்சள் ஆகிய மூன்றையும் சம அளவு கலந்து பொடித்துக் வைத்துக் கொள்ளுங்கள். இதனை தினமும் கழுத்து, முகத்தில் பூசி குளித்து வந்தால், உங்கள் முகத்திற்கு எந்த அழகு க்ரீம்களும் அவசியம் இருக்காது.

வாரம் ஒரு நாள் வேப்பிலையை அரைத்து, உடலில் தேய்த்து 5 நிமிடங்கள் ஊற விடுங்கள். பின்னர் குளித்தால் தேகம் மின்னும். சரும வியாதிகள் எதுவும் உங்களை நெருங்காது. குளிர்காலத்தில் வறண்டு போகாமல் ஈரப்பதத்தை தக்க வைக்கும்.
முகத்தில் கரும்புள்ளி, முகப்பருக்கள் மறைய:

பாத்திரத்தில் தண்ணீர் உற்றி அதில் புதினா இலை இரண்டு, வேப்பிலை நான்கு, துளசி இலை நான்கு சேர்த்து நன்கு கொதித்த பின் முகத்தில் ஆவி பிடிக்கவும். வாரம் இருமுறை செய்தால் முகப்பருக்கள் காணாமல் போயிடும். சருமத் துளைகள் திறந்து பேக்டீரியக்களை அழித்துவிடும். முகப்பருக்கள் அண்டாது.

முல்தானி முட்டியுடன் சிறிது ரோஸ் வாட்டர், எலுமிச்சை சாறு சில சொட்டுக்கள் கலந்து முகத்தில் மாஸ்க் போல் போடவும். 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவினால் முகப்பரு தொல்லை இருக்காது.

கை, கால்களை பராமரிக்க:

கைகால்களில் ஆலிவ் எண்ணெயை நன்றாக தேய்த்து, 10 நிமிடங்கள் ஊற விடுங்கள். பின்னர் சுடுநீரில் சோடா உப்பு, எலுமிச்சை சாறு, சிறிது ஷாம்பு கலந்து, அதில் கால்களையும் நனைக்கவும். 15 நிமிடங்கள் கழித்து கால்களை ஃப்யூமிக் கற்களால் தேய்த்தால் பாதங்கள் மிருதுவாகும். கைகளை அதே போன்று நீரில் ஊற வைத்து, மசாஜ் செய்தால் போது. மென்மையான கைகளைப் பெறலாம். வாரம் ஒருமுறை செய்தால் கைகால்கள் பார்ப்பதற்கு அழகாக மாறிவிடும்.

கூந்தல் உதிர்வதை தடுக்க:

செம்பருத்தி இலை, செம்பருத்திப் பூ, எலுமிச்சைத் தோல், ஆரஞ்சுத் தோல், வேப்பிலை, மருதாணி இலை இவற்றை நிழலில் உலர்த்தி, நன்கு அரைத்து பொடி செய்து கொள்ளுங்கள்.
இந்த பொடியில் முட்டை சேர்த்து தலையில் எண்ணெய் தேய்த்த பின், இந்தக் கலவையை, வேர்க்கால்களில் தடவி 20 நிமிடம் நன்கு ஊற வைத்து பின் நீரில் தலை முடியை அலசவும் இதை வாரம் ஒரு முறை செய்தால் அதிக முடி உதிர்தல் குறையும்.

கூந்தல் அடர்த்தியாக வளர:

தேங்காய் என்ணெயை சூடுபடுத்தி அதில் அரைத்த மருதாணியை சேர்த்து, காய்ச்சுங்கள். நுரை அடங்கியதும் அடுப்பை அணைத்து, வடிகட்டி அந்த எண்ணெயை தடவி வர முடி நன்றாக வளரும்.
கற்றாழைச் சாற்றை தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலைக்குத் தேய்த்து வந்தால் தலைமுடி நன்றாக வளரும். தேங்காய் எண்ணையில் கறிவேப்பிலையை நன்றாக அரைத்து காய்ச்சி தினமும் தேய்த்து வர, தலைமுடி கருப்பாக அடர்த்தியாக வளரும். எலுமிச்சம் சாற்றையும் காரட்டையும் தேங்காய் எண்ணையில் கலந்து தினமும் தடவி வந்தால் முடி நன்றாக கருப்பாக வளரும்.

சிவந்த உதடுகளைப் பெற:

தினமும் தூங்குவதற்கு முன் உதடுகளில் வெண்ணெய் தடவினால் குளிரினால் உதடுகள் வறண்டு போகாமல் தடுக்கலாம். தயிரை உதட்டில் த்டவி வந்தால், உதட்டில் உண்டாகும் கருமை மறையும்

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஒற்றை சக்கரத்தில் சைக்கிள் ஒட்டி சாதனை படைத்த இளைஞர்…!! வீடியோ
Next post காலியில் நில அதிர்வு! ஆபத்தின் எதிரொலியா?