இந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்தாதீர்கள்! உஷார்…!!

Read Time:4 Minute, 10 Second

625-500-560-350-160-300-053-800-748-160-70-7மனிதனின் உடலில் இருக்கும் உடலுறுப்புகளில் மிக முக்கியமானது சிறுநீரகம். சிறுநீரகம் வயிற்றின் பின்புறத்தில் காணப்படுகின்றது. இவை முள்ளந்தண்டின் இரு பக்கங்களிலும், பக்கத்துக்கு ஒன்றாகக் காணப்படுகின்றன.

வலது சிறுநீரகம், கல்லீரலுக்குச் சற்றுக் கீழேயும், இடது சிறுநீரகம் பிரிமென்றகட்டிற்குக் கீழே மண்ணீரலுக்கு அருகிலும் அமைந்துள்ளன.

வாழ்க்கை முறை மற்றும் உணவு முறை மாற்றத்தால் உலகளவில் ஆண்டிற்கு சுமார் 80 லட்சம் பேருக்கு சிறுநீரகம் சம்மந்தமான வியாதிகள் வருவதாக ஆய்வுகள் கூறுகிறது.

சரி சிறுநீரக நோய்களின் முக்கிய அறிகுறிகள் என்ன?

சீறுநீரக செயல்ப்பாடில் மாற்றங்கள்

இது தான் முதல் அறிகுறி! வழக்கத்தை விட அதிக முறை சிறுநீர் கழிந்தால், அதுவும் இரவில் அதிக முறை சிறுநீர் கழிந்தால் சிறுநீரகத்தில் ஏதோ பிரச்சனை இருப்பதாக அர்த்தமாகும். இதற்கு உடனே மருத்துவரை அணுகுவது நல்லது.

சிறுநீர் கழிப்பதில் சிரமம்

சிறுநீர் கழிக்கும் போது ஒரு வித எரிச்சலாகவோ அல்லது சிறுநீர் சரியாக வராமல் இருந்தாலோ சிறுநீரகத்தில் ஏதோ கிருமி தொற்று ஏற்பட்டிருக்க அதிக வாய்ப்புள்ளது.

சிறுநீருடன் ரத்தம் வருதல்

சில சமயம் சிறுநீர் கழிக்கும் போது அதனுடன் சேர்ந்து ரத்தம் வரும். இப்படி ரத்தம் வருவதால் அது கண்டிப்பாக சிறுநீரக பிரச்சனையாக தான் இருக்கும் என அர்த்தமல்ல. வேறு பிரச்சனையாக கூட இருக்கலாம், உடனே மருத்துவரை அணுகுவது நல்லது.

கடுமையான உடல் சோர்வு

சிறுநீரகத்தில் இருந்து வெளிவரும் ஹார்மோன் தான் மனித உடலில் ரத்த ஓட்டத்தை கொடுத்து ஆக்சிஜனை பரவ செய்கிறது. சிறுநீரகத்தில் ஏதாவது பிரச்சனை இருந்தால் ஆக்சிஜன் சரியாக பரவாமல் முழு உடலையும் சோர்வடைய செய்கிறது.

அடிக்கடி ஜலதோஷம்

ஒருவர் நல்ல சூடான சூழல் உள்ள இடத்தில் இருந்தால் கூட அவருக்கு அடிக்கடி ஜலதோஷம் ஏற்பட்டால் சிறுநீரகத்தில் ஏதோ கிருமி பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அர்த்தமாகும்.

உடலில் அரிப்பு

சிறுநீரகத்தில் பிரச்சனை ஏற்படும் பலருக்கு உடலில் உள்ள நச்சுகள் வெளியேறாது. இதனால் உடலில் அரிப்பு பிரச்சனை அதிகமாக இருக்கும்.

முதுகு வலி

முதுகின் கீழ் பகுதியில் கடுமையான வலி இருந்தால் சிறுநீரகத்தில் கல் அல்லது வேறு பிரச்சனை இருக்க அதிக வாய்ப்புள்ளது.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள அறிகுறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினால் சிறுநீரக பிரச்சனையிலிருந்து நிச்சயம் நிரந்தரமாக விடுபட முடியும்.

இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான (மருத்துவம்) தகவல்களையும், கருத்துக்களையும், செய்திகளையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்… https://www.nitharsanam.net/category/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிரபாகரனை முப்படைத் தளபதியாக நியமிக்க இருந்த பிரேமதாசா!! (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை -(பாகம் -97) “விறுவிறுப்பான அரசியல் தொடர்” -அற்புதன்)
Next post ரத்தத்தை குடிக்க வைத்து காதலனை கத்தியால் சரமாரியாக குத்திய காதலி! வியக்க வைக்கும் காரணம்…!!