கமலை சந்தித்ததன் காரணம் என்ன? : மௌலி விளக்கம்…!!

Read Time:2 Minute, 11 Second

201611291726389839_mouli-explain-for-meet-to-kamal_secvpfகமலை தான் சந்தித்ததற்கான காரணம் என்னவென்பதை மௌலி விளக்கமாக கூறியுள்ளார். அதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்..

கமல் நடிப்பில் வெளிவந்த ‘பம்மல் கே.சம்பந்தம்’ படத்தை இயக்கியவர் மௌலி. இவர் காமெடி நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் என சினிமாவில் பன்முகம் கொண்டவராகவும் விளங்கினார். இதன்பிறகு, இவர் இயக்கிய ‘நளதமயந்தி’ படத்தை கமல் தயாரித்திருந்தார்.

இந்நிலையில், கமல் தற்போது நடித்து வரும் ‘சபாஷ் நாயுடு’ படத்திற்கு பிறகு மௌலி இயக்கத்தில் நடிக்கப்போவதாகவும், அந்த படத்தை ஏவிஎம் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் கடந்த சில நாட்களாக கோலிவுட்டில் ஒரு செய்தி பரவியது.

சமீபத்தில் கமலை நேரில் சந்தித்த மௌலி, தன்னிடம் இருந்த ஒரு கதையை கமலிடம் சொன்னதாகவும், அவருக்கு அந்த கதை பிடித்துப்போய் இதில் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்திற்கு ஏ.வி.எம். நிறுவனர் ‘மெய்யப்பன்’ அவர்கள் பெயரை தலைப்பாக வைக்கப்போவதாகவும் செய்திகள் வெளியானது.

இந்த செய்தியை யக்குனர் மௌலி முற்றிலும் மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, கமலை நேரில் சந்தித்து உண்மைதான். அது வெறும் நட்பு ரீதியான சந்திப்புதானே தவிர, படம் குறித்து நாங்கள் எதுவும் பேசவில்லை என்று கூறினார்.

‘சபாஷ் நாயுடு’ படத்திற்கு முன்பே மௌலி, கமலிடம் ஒரு கதையை கூறியிருந்தார். அந்த கதையில் கமல் நடிப்பதற்கு இதுவரை எந்த பதிலும் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இந்த யானை காட்டும் பாசத்தை பாருங்கள்… உங்களுக்கும் ஆசை வரும்…!! வீடியோ
Next post விமானத்தின் எமர்ஜென்சி கதவை திறந்து வெளியில் குதித்த பெண்: பயணிகள் அதிர்ச்சி…!!