விமானத்தின் எமர்ஜென்சி கதவை திறந்து வெளியில் குதித்த பெண்: பயணிகள் அதிர்ச்சி…!!

Read Time:2 Minute, 11 Second

201611292047332448_woman-opens-emergency-exit-door-jumps-out-of-plane-after_secvpfயுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமா விமானம் ஒன்று நியூ ஓர்லியான்ஸில் இருந்து அமெரிக்காவின் ஹூஸ்டனில் உள்ள ஜார்ஜ் புஷ் சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று மதியம் வந்தது. விமானம் தரையிறங்கியதும். பயணிகளை இறக்கவிடக் கூடிய இடத்திற்குச் சென்று கொண்டிருந்தது.

இந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகள் கீழே இறங்குவதற்காக தங்களை தயார் படுத்திக் கொண்டிருந்தார்கள். அப்போது திடீரென ஒரு பெண் பயணி எமர்ஜென்சி கதவை திறந்து கொண்டு வெளியில் குதித்தார். இதனால் அருகில் இருந்த பயணிகள் உறைந்து போனார்கள். விமானம் ஓடுதளத்தில் இருந்து பயணிகளை இறக்கு விடும் இடத்திற்குச் சென்று கொண்டிருந்ததால் எந்தவொரு அசம்பாவிதமும் ஏற்படவி்ல்லை. விமானம் நடுவானில் பறந்து கொண்டிருக்கும்போது இச்சம்பவம் ஏற்பட்டிருந்தால் பெரிய அசம்பாவிதம் ஏற்பட்டிருக்கும்.

விமானத்தில் இருந்து குதித்த பெண்ணின் விவரம் உடனடியாக தெரியவில்லை. அவருக்கு பெரிய காயம் ஏதும் ஏற்படவில்லை என்று விமான நிறுவனத்தில் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார். ஹூஸ்டன் போலீசார் அந்த பெண்னை பிடித்து விசாரணை நடத்தினர்.

இந்த சம்பவம் குறித்து அருகில் இருந்த பயணி ஒருவர் கூறும்போது ‘‘நான் உலகின் பல்வேறு இடங்களுக்கு சென்றுள்ளேன். நீண்ட நேர விமான பயணத்தில் இருந்துள்ளேன். ஆனால், இதுபோன்ற ஒரு சம்பவத்தை இதற்கு முன் நான் பார்த்ததில்லை’’ என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கமலை சந்தித்ததன் காரணம் என்ன? : மௌலி விளக்கம்…!!
Next post வெறும் இரண்டே நிமிடத்தில் முகத்தில் உடனடி பொலிவு! அருமையான குறிப்பு…!!