இந்த காய்கறியை சாப்பிடும் போது மட்டும் தோலை நீக்கிவிடாதீர்கள்…!!

Read Time:4 Minute, 7 Second

625-500-560-350-160-300-053-800-748-160-70-8அன்றாட வாழ்வில், நாம் சாப்பிடும் உணவில் அதிகமாக பச்சைக் காய்கறிகளை சேர்த்துக் கொண்டால் நம்முடைய ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம் என்று கூறுவார்கள்.

பச்சைக் காய்கறிகள் சிலவற்றை சாப்பிடும் போது, சிலர் அதனுடய தோலை உரித்து சாப்பிடுவார்கள்.

ஏனெனில் அந்தக் காய்கறிகளின் தோலின் வெளியில், பாக்டீரியாக்கள் மற்றும் இதர கிருமிகள் இருக்கும் என்பதற்காக அதனை நீரில் நன்கு கழுவுவதோடு, அதனுடைய தோலையும் நீக்கிவிடுவார்கள்.

ஆனால் நாம் தோல் உரித்து சாப்பிடும் பச்சைக் காய்கறிகளில் சிலவற்றின் தோலை உரிக்காமல் சாப்பிட்டால் தான் அதனுடய முழுமையான சத்துக்களையும் நாம் பெற முடியும்.

ஒருசில காய்கறிகளின் தோல்களில் நார்ச்சத்துக்கள் மற்றும் இதர ஊட்டச்சத்துக்கள் மிகவும் அதிகமாக நிறைந்துள்ளது. எனவே சில காய்கறிகளின் தோலை மட்டும் உரிக்காமல் சாப்பிடுவது மிகவும் நல்லது.

கேரட்

கேரட் தோலில் பீட்டா கரோட்டீன், பீனோலிக், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் போன்ற சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. எனவே கேரட்டை எப்போதும் தோலுடன் சாப்பிட்டால், இதய நோய், புற்றுநோய், பார்வை கோளாறு போன்ற பிரச்சனைகள் ஏற்படாது.

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காயின் தோலில், கலோரிகள் குறைவாகவும், விட்டமின் K மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், நார்ச்சத்துக்கள் போன்றவை அதிகமாகவும் உள்ளது. எனவே வெள்ளரிக்காயை தோலுடன் சாப்பிட்டால், மலச்சிக்கல் மற்றும் குடல் புற்றுநோய் போன்ற பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்புகள் தடுக்கப்படுகிறது.

பீட்ரூட்

பீட்ரூட்டின் தோலில் பீட்டாலெயின் என்னும் பைட்டோ நியூட்ரியண்ட்டுகள் உள்ளன. எனவே பீட்ரூட் தோலை நீக்காமல், அதை சிறு துண்டுகளாக நறுக்கி, அதனுடன் ஆலிவ் ஆயில் மற்றும் உப்பு சேர்த்து கலந்து, வேகவைத்து சாப்பிட்டால் மிகவும் நல்லது.

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கின் தோலில் நார்ச்சத்து, விட்டமின்கள், பொட்டாசியம், காப்பர், இரும்புச்சத்து போன்றவை அதிகம் உள்ளது. எனவே உருளைக் கிழங்கை தோலுடன் சமைத்து சாப்பிடுவது மிகவும் நல்லது.

கத்திரிக்காய்

ஊதா நிறமுள்ள கத்திரிக்காயின் தோலில் மட்டும் ஆன்டி-ஆக்ஸிடன்டுகள் மற்றும் ப்ளேவோனாய்டுகள் போன்ற சத்துக்கள் அதிகமாக உள்ளது. எனவே கத்திரிக்காய் வாங்கும் போது, ஊதா நிற கத்திரிக்காயை வாங்கி அதை தோலுடன் சாப்பிடுவதால் நமது உடம்பின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான (மருத்துவம்) தகவல்களையும், கருத்துக்களையும், செய்திகளையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்… https://www.nitharsanam.net/category/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இளம்பெண்ணை கொன்றால் ரூ.15 கோடி பரிசு: ஐ.எஸ் அமைப்பு அதிரடி அறிவிப்பு..!!
Next post ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்க ஆர்வமாக இருக்கிறேன்: அமீர்கான் பேட்டி…!!