கொழும்பு மாநகர சபையை கைப்பற்றியது ஐ.தே.க. ஆதரவு குழு

Read Time:1 Minute, 28 Second

ranil.UNP.bmpசிறிலங்கா தலைநகர் கொழும்பு மாநகர சபைக்கான தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவு சுயேட்சைக் குழுவான இலக்கம் 03 ஜக் கொண்ட சுயேட்சைக் குழு வெற்றி பெற்றுள்ளது.

கொழும்பு மாநகர சபைத் தேர்தலில் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதால் ஐக்கிய தேசியக் கட்சி போட்டியிடவில்லை. மூக்குக் கண்ணாடி சின்னம் ஒதுக்கப்பட்ட சுயேட்சைக் குழு – 03 ஐ அக்கட்சி ஆதரித்தது.

ஐக்கிய தேசியக் கட்சி ஆதரித்த சுயேட்சைக் குழு 23 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவு குழு 82,580 வாக்குகளையும் மகிந்த ராஜபக்சவின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 14 ஆசனங்களையும் (57,158) வாக்குகளையும் இலக்கம் 04 ஐக் கொண்ட சுயேட்சைக் குழு 04 ஆசனங்களையும் (17,480) மேலக மக்கள் முன்னணி 04 ஆசனங்களையும் (16,068) பெற்றுள்ளன.

ஜனநாயக மக்கள் முன்னணி, மலையக மக்கள் முன்னணி, சுயேட்சைக் குழு – 02 மற்றும் ஜாதிக ஹெல உறுமய ஆகியவை தலா ஒரு ஆசனத்தைப் பெற்றுள்ளன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தங்களின் மழலைச் செல்வங்களை நடுத்தெருவில் விட்டுவிட்டு புளொட்பாரூக் சாந்தா தம்பதிகள் வன்னிக்கு உல்லாசப்பயணம் என்கிறார்கள் வன்னிப்புலிகள்!!! இது எப்படியிருக்கு??
Next post வவுனியாவில் மிதிவெடியில் சிக்கி இராணுவத்தைச் சேர்ந்த ஒருவர் பலி