உடலினுள் இருக்கும் புழுக்களை எளிய வழியில் வெளியேற்ற வேண்டுமா?

Read Time:3 Minute, 36 Second

helth_news003-w540நம் உடலினுள் நிச்சயம் உண்ணும் உணவுகள், குடிக்கும் நீர் மற்றும் இதர வழிகளின் மூலம் புழுக்கள் நுழைந்து, நம்மை பாடாய் படுத்தும். இப்படி நம்மை அசௌகரியமாக உணர வைக்கும் புழுக்களை அழிக்க வழியே இல்லையா என்று பலரும் வருந்துவார்கள்.

ஒருவரது உடலினுள் புழுக்கள் அதிகமாக இருந்தால், உடல் ஆரோக்கியம் மோசமாக பாதிக்கப்படும். ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை உடலினுள் உள்ள புழுக்களை அழிக்க உதவும் சில எளிய இயற்கை வழிகளைக் கொடுத்துள்ளது.

அதைப் படித்து அவற்றைப் பின்பற்றி, உடலை புழுக்களின்றி சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்.

1 தினமும் காலையில் வெறும் வயிற்றில் இளநீரை குடித்து வந்தால், வயிற்றில் இருக்கும் புழுக்கள் அழிக்கப்படும்.

2 தினமும் பச்சையாக ஒரு பூண்டு பல்லை சாப்பிட, வயிற்றில் உள்ள புழுக்கள் அழிக்கப்பட்டு, உடல் சுத்தமாக இருக்கும்.

3 வசம்பை சூடேற்றி பொடி செய்து, தேன் கலந்து சாப்பிட்டு வந்தாலும், வயிற்றில் உள்ள புழுக்கள் அழியும்

4 கற்பூரத்தை பொடி செய்து, நீரில் கலந்து, அத்துடன் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து, சிறுநீர் கழிக்கும் பகுதியில் தெளித்துவிடுங்கள். இதனால் அப்பகுதியில் உள்ள புழுக்கள் அழிக்கப்படும்.

5 ஒரு பூண்டு பல்லை எடுத்து தோலுரித்து, வேஸ்லின் உடன் சேர்த்து பேஸ்ட் செய்து, பிட்ட பகுதியில் தடவ புழுக்கள் அழிக்கப்படும்.

6 குழந்தைகளுக்கு பப்பாளிப் பழத்தை அன்றாடம் கொடுத்து வருவதன் மூலம், குழந்தைகள் புழுக்களின் குடைச்சலால் அவஸ்தைப்படுவதைத் தடுக்கலாம்.

7 வயிற்றில் புழுக்கள் இருப்பது போல் இருந்தால், 1 டீஸ்பூன் வெங்காய சாற்றினை தினமும் இரு முறை பருக வேண்டும். இதனால் நாடாப்புழுக்கள் அழிக்கப்பட்டு வெளியேற்றப்படும்.

8 வேப்பிலை பொடி அல்லது வேப்பிலையின் கொளுந்து பகுதியை வாயில் போட்டு மென்று விழுங்க, அதன் கசப்புத்தன்மையால் புழுக்கள் அழிக்கப்படும்.

9 ஒரு சிட்டிகை பெருங்காயத் தூளை ஒரு சிறு துண்டு வெல்லத்துடன் சேர்த்து, உணவு உண்பதற்கு 1/2 மணிநேரத்திற்கு முன் உட்கொள்ள, புழுக்கள் அழிக்கப்படும்.

இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான (மருத்துவம்) தகவல்களையும், கருத்துக்களையும், செய்திகளையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்… https://www.nitharsanam.net/category/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சென்னையில் இருந்து சென்ற மின்சார ரெயிலில் தவித்த குழந்தை…!!
Next post திருமலையில் பிறந்த விசித்திர கன்றுக்குட்டி…!!