எந்த நோயையும் குணப்படுத்தும் திரிபலா சூரணம்..!!

Read Time:10 Minute, 31 Second

201702150824072343_cure-any-disease-thiripala-suranam-benefits_SECVPFதிரிபலா என்பது பாரம்பரிய ஆயுர்வேத மருந்து. இது ஒரு நித்ய ரசாயனமாகவும், காயகல்பமாகவும் கருதப்படுகிறது.

திரிபலா என்பது 3 பழங்களின் கூட்டுப் பொருளாகும். கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் ஆகிய மூன்றின் கலவை அற்புதமான காயகல்பமாகி தேவர்களின் அமிர்தத்தை போல் எந்த ஒரு நோயையும் தீர்க்கும் அற்புத சக்தியை பெற்றுள்ளது.

திரிபலா சூரணத்தை தினமும் சாப்பிட்டு வர வளச்சிதை மாற்றம் சீராக இருக்கும். அஜீரண கோளாறு நீங்கும். ரத்தம் சுத்திகரிக்கப்படும். ரத்த ஓட்டம் சீராகும். கல்லீரல், நுரையீரலில் புண்கள் வராமல் பாதுகாக்கும். ஆஸ்துமா, மஞ்சள் காமாலை இருப்பவர்களுக்கு ஏற்றது.

கடுக்காய்:

கடுக்காயை ஹரீதகி என்று அழைப்பார்கள். இதற்கு விஜயா, அமிர்தா, காயஸ்தா, ஹேமவதி, பத்யா, சிவா என்றெல்லாம் பெயர்கள் உண்டு. பிராணனை அளிக்க வல்லதால் இதனை பிராணதா என்றும் அழைப்பார்கள்.

அறுசுவையில் உப்பை தவிர்த்து துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கசப்பு, கார்ப்பு ஆகிய 5 சுவைகள் நிறைந்த கடுக்காயில் வாத கப தன்மையை சீர்படுத்தும் சக்தி இருக்கிறது. கடுக்காயின் விதை பகுதி நஞ்சு போல் பாவிக்கப்படுவதால் அதை நீக்கிவிட்டு பயன்படுத்த வேண்டும்.

கடுக்காயானது முட்டை வடிவிலோ அல்லது நீண்ட முட்டை வடிவத்துடனோ காணப்படும். கடுக்காயில் ஏழு வகைகள் உள்ளதென சித்த மருத்துவ நூல்கள் குறிப்பிடுகின்றன. அவை அபயன், விசயன், பிரிதிவி, சிவந்தி, அமுர்தம், ரோகிணி, திருவிருதம் என்பவை ஆகும்.

இதில் மரங்கள், இடம், காயின் வடிவம், தன்மை ஆகியவற்றை பொறுத்து கருங்கடுக்காய், செங்கடுக்காய், வரிக் கடுக்காய், பால் கடுக்காய் என பல வகைகளாக பிரிக்கப்படும்.

கப வாதங்களை தணிப்பதில் சிறந்தது.மூல நோய்க்கு சிறந்தது. பசியை தூண்டுவது. அக்னியை அதிகரிக்க செய்வது. புண்களை ஆற்றுவது, மலபந்தத்தை அகற்றுவது. இதனை நாட்பட பயன்படுத்தினால் சற்று ஆண்மை குறைவை ஏற்படுத்தலாம்.

இதில் செய்கிற முக்கியமான மருந்துகள் தசமூல ஹரிதகி, அகஸ்திய ரசாயனம் போன்ற வையாகும். உடலில் வீக்கம், பாண்டு, குல்மம் போன்ற நோய்களுக்கு இது சிறந்தது.

கடுக்காய்க்கு வலிமையூட்டி, நீர்ப்பெருக்கி, உள்ளழலகற்றி போன்ற குணங்களை கொண்டுள்ளது. புண்கள், கண் நோய், இருமல், காமாலை, கை கால் நமைச்சல், தலை நோய், இரைப்பு, தொண்டை வலி, நாவறட்சி, மார்பு நோய், மூலம்,மேகம், வயிற்று பெருமல், விக்கல் போன்றவற்றை குணப்படுத்தும். கடுக்காயுடன் எள் சேர்த்து சாப்பிட்டால் குஷ்டங்கள், விரணங்கள் மாறும். கொழுப்பை போக்கும் தன்மையும் இதற்கு உண்டு.

ஜீரண சக்தி அதிகரிப்பு, அறிவு சக்தி மேம்பாடு, ஐம்புலன் களு-க்கும் சக்தி தருதல் ஆகிய குணங்களும் உள்ளது. கனமான தொடை பகுதியை சுருக்குதல், தோல் வியாதியை குணப்படுத்துதல், மண்ணீரல் சக்தியை மேம்படுத்துதல், உடல் வீக்கங்களை போக்குதல், சுவாச நோய்களை கட்டுப்படுத்துதல், ரத்தநாள அடைப்பை நீக்கி இதயத்தை வலுப்படுத்துதல் போன்ற பல பலன்களையும் கடுக்காய் தருகிறது.

3 கடுக்காய் தோலை எடுத்து தேவையான இஞ்சி, மிளகாய், புளி,உளுத்தம் பருப்பு ஆகியவற்றை சேர்த்து நெய்யில் வதக்கி எடுத்து உப்பு சேர்த்து துவையலாக அரைத்து சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டு வர ஜீரண சக்தி கூடும். மலச்சிக்கல் மாறும். உடல் பலம் பெறும்.

கடுக்காய் தூளை 10 கிராம் எடுத்து அதே அளவு சுக்குதூள், திப்பிலி தூள் ஆகியவற்றுடன் கலந்து காலை, மாலை நேரங்களில் அரை ஸ்பூன் வீதம் 21 நாட்கள் சாப்பிட்டு வர வாத வலி, பித்த நோய்கள் குணமாகும். 15 கிராம் கடுக்காய் தோலை எடுத்து நசுக்கி 15 கிராம் கிராம்பு சேர்த்து ஒரு டம்ளர் நீர் விட்டு கொதிக்க வைத்து ஆறிய பின் அதிகாலையில் குடித்தால் நாலைந்து முறை பேதியாகும். அதன்பின்பு மலச்சிக்கல், வயிற்று பிணிகள் மாறிவிடும். மூக்கில் இருந்து ரத்தம் வந்தால் சிறிதளவு கடுக்காய் தூளை எடுத்து மூக்கால் உறிய ரத்தம் வருவது நின்றுவிடும்.

10 கிராம் வீதம் கடுக்காய் தூள், காசுகட்டி தூள் சேர்த்த சிறிதளவு பொடியை வெண்ணையில் குழைத்து நாக்கு புண், உதட்டு புண்ணில் பூசி வர புண்கள் ஆறிவிடும்.

நாவறட்சி, தலை நோய், ஈரல் நோய், வயிற்றுவலி, குஷ்டம், இளைப்பு, தொண்டை நோய், கண்நோய், வாதம், வயிற்று புண், காமாலை போன்ற நோய்களை குணப்படுத்தும் தன்மையு-ம் கடுக்காய்க்கு உண்டு.

தான்றிக்காய்:

தான்றிக்காயை கர்ஷம், அக்ஷம் என்று குறிப்பிடுவார்கள். இது மகாவிருக்ஷம் ஆகும். எல்லா இருமலுக்கும், சளிக்கும் இதை முகதாரணம் செய்வதற்கு சிறந்தது. கபப்பித்தத்தை இது தணிக்கும். சிறிது உஷ்ண வீர்யம் உடையது. இருமலை மாற்றும், கண்ணுக்கு சிறந்தது. இதிலிருந்து எடுக்கும் எண்ணை கூந்தல் வளர்வதற்கு உதவுகிறது. கண்ட ரோகங்களை மாற்றுவது, தொண்டை கரகரப்புக்கு சிறந்தது. வெல்லத்துடன் சேர்த்து சாப்பிட வாதத்தை தணிக்கும்.

தான்றி மரம் பிரமாண்ட தோற்றம் கொண்டது. 120 அடி வரை கூட வளரும். தண்டின் அடிப்பகுதியின் சுற்றளவு 10 அடி வரை இருக்ககூடும். இதன் இலைகள் கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படும். குறிப்பாக கறவை மாடுகளின் பால் பெருக்கத்துக்கு இது சிறந்த தீவனம்.

வடமொழியில் தான்றியை விபீதகி என்பார்கள். தினந்தோறும் தான்றி உண்டால் நோய் நீங்கும் என்பது இதன் அர்த்தம். இதை கொட்டை நீக்கி கருகாமல் வறுத்து பொடித்து 1 கிராம் அளவு சர்க்கரை கலந்து காலை, மாலை கொடுக்க மலச்சிக்கல், குடல் பலமின்மை, காய்ச்சல், பித்த தலைவலி, ரத்தமூலம், சீதபேதி ஆகியவை தீரும்.

தான்றிபொடி 3 கிராமுடன் சம அளவு சர்க்கரை வெந்நீரில் கலந்து காலை, மாலை சாப் பிட பித்த நோய்கள், வாய் நீர் ஒழுகல் தீர்ந்து தெளிவுறும். இதன் காயை நீர்விட்டு இழைத்து புண்களில் பூச ஆறும். அக்கியில் பூச எரிச்சல் தணிந்து குணமாகும்.

தான்றிக்காயின் தோலை வறுத்து பொடித்து தேனுடனோ சர்க்கரையுடனோ காலை மற்றும் மாலை சாப்பிட ரத்த மூலம் நிற்கும். தான்றிக்காய் தோலை சேகரித்து சூரணம் செய்து கொள்ளவும். இதில் அரை தேக்கரண்டி அளவு தேனில் கலந்து சாப்பிட்டு வர அம்மை நோய்கள் தீரும்.

தான்றிக் காயை சுட்டு மேல் தோலை பொடித்து அதன் எடைக்கு சமமாய் சர்க்கரை கலந்து தினசரி காலையில் வெந்நீருடன் சாப்பிட்டு வர பல்வலி, ஈறு நோய்கள் போன்றவை குணமாகும்.

தான்றிக்காய் தோல், திப்பிலி, அதிமதுரம் ஆகியவற்றை வகைக்கு 100 கிராம் எடுத்து தூள் செய்து கொள்ளவும். இதில் 10 கிராம் அளவு எடுத்து அரை லிட்டர் தண்ணீரில் கொதிக்க வைத்து, நான்கில் ஒரு பாகமாய் சுண்ட வைத்த கஷாயத்தை வடிகட்டி காலை, மாலை இரண்டு வேளையும் 100 மி.லி. அளவில் குடித்து வர ஆஸ்துமா, மூச்சிளைப்பு, மூச்சு திணறல், படபடப்பு ஆகியவை எளிதில் குணமாகும்.

தான்றிக் காய், நெல்லிக்காய் வகைக்கு 100 கிராம், கீழா நெல்லி, கரிசலாங் கண்ணி, குப்பை மேனி வகைக்கு 50 கிராம், சுக்கு, மிளகு, திப்பிலி, சீரகம் வகைக்கு 25 கிராம், அன்னபேதி செந்தூரம் 10 கிராம் இவை அனைத்தையும் ஒன்றாய் கலந்து தூள் செய்து ஒரு தேக்கரண்டி பொடியை தேனில் குழைத்து காலை, மாலை சாப்பிட்டு வர ரத்தம் பெருகும். ரத்த சோகை விலகும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஸ்ரீதேவி மகள் காதலர் தினத்தை யாருடன் கொண்டாடினார் தெரியுமா?..!!
Next post கணவன் – மனைவி உறவை புதுப்பிக்க திருக்குறள் கூறும் 10 குறிப்பு – புணர்ச்சி மகிழ்தல்..!!