பாசிச பயங்கரவாதம் தோற்கடிக்கப்படவேண்டும். ஜனநாயம் புத்துயிர் பெறவேண்டும்.

Read Time:2 Minute, 24 Second

Rajiv.jpgrajiv_210520061.jpg
ராஜிவ் காந்தி நினைவு நாள்

இன்று இந்தியாவின் இளம் தலைவரும் முன்னாள் பிரதமருமான ராஜிவ் காந்தி அவர்கள் புலிகளால் படுகொலை செய்யப்பட்ட தினம். ;ராஜிவ் காந்தி அவர்கள் இலங்கைத்தமிழர்களின் பிரச்சனைகளுக்கு நியாயபூர்வமான தீர்வை உருவாக்குவதில் தம்மை அர்ப்பணித்தவர். இன்றைக்கு 19 வருடங்களுக்கு முன்னர் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தினு}டாக இனப்பிரச்சனைக்கு தீர்வாக நடை முறை சார்ந்த முயற்சியை மேற்கொண்டவர்.

புலிகளும் பிரேமதாச அரசும் மேற்கொண்ட சதிவேலைகளால் அந்த ஒப்பந்தம் சீர்குலைக்கப்பட்டது. அந்த ஒப்பந்தம் சரியான முறையில் நடைமுறைப்படுத்தப் பட்டிருந்தால் தமிழ் மக்களின் இன்றைய அவல நிலைக்கு இடமிருந்திருக்காது.

அந்த ஒப்பந்தத்தை பிரேமதாச அரசுடன் சேர்ந்து சீர்குலைத்தது மாத்திரமல்ல, அந்த ஒப்பந்தத்தை வரவேற்றதற்காக, அதனை நடைமுறை சாத்தியமாக்கச் செயற்பட்டதற்காக அமிர்தலிங்கம், பத்மநாபா போன்றதலைவர்களும் ஆயிரக்கணக்கான போராட்டகாரர்களும் ,சமாதானம் விரும்பும் மக்களும் படுகொலை செய்யப்பட்டார்கள்.

ராஜிவ் காந்தி அவர்கள் இன்றைய தினத்தில் இற்றைக்கு 15 வருடங்களுக்கு முன்னர் புலிப்பாசிச பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டார்;. அது இந்தியாவிற்கும் தென்னாசிய பிராந்தியத்திலுள்ள ஜனநாயக சத்திகளுக்கு விடுக்கப்பட்ட பாசிச பயங்கரவாத அச்சுறுத்தலாகும். இந்த பாசிச பயங்கரவாத சத்திகள் தோற்கடிக்கபடவேண்டும்.

ராஜிவ் காந்தி அவர்களின் நினைவு தினத்தில் எமது மண்ணில் ஜனநாயகத்தை உயிர்ப்;பிக்க திட உறுதி கொள்வோம்.
rajiv_210520061.jpg

Thanks…Tamilnewsweb.com

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வவுனியாவில் மிதிவெடியில் சிக்கி இராணுவத்தைச் சேர்ந்த ஒருவர் பலி
Next post நேற்று நடந்து முடிந்த உள்ளுராட்சி தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் முன்னிலையில் உள்ளது