உணவு இல்லாமல் கடந்த 48 மணி நேரத்தில் 110 பேர் பலி: எந்த நாட்டில் தெரியுமா?..!!

Read Time:2 Minute, 32 Second

625.0.560.350.160.300.053.800.668.160.90சோமாலியா நாட்டில் உணவு, தண்ணீர் இல்லாத காரணத்தினால் கடந்த 48 மணி நேரத்தில் 110 பேர் பலியாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சோமாலியாவில் கடும் வறட்சி ஏற்பட்டு வருகிறது.

புறநகர்களில் வசிக்கும் மக்கள் குடிநீருக்காக ஒவ்வொரு நாளும் சுமார் 50 கி.மீ தூரம் நடைப்பயணமாக சென்று தண்ணீர் பெறும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், சோமாலியா நாட்டு பிரதமரான Hassan Khaire என்பவர் நேற்று ஒரு அதிர்ச்சி அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

அதில், வறட்சி காரணமாக உணவு மற்றும் தண்ணீர் இல்லாமல் கடந்த 48 மணி நேரத்தில் மட்டும் 110 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உயிரிழப்பு என்பது நாடு முழுவதும் ஏற்பட்டது அல்ல. சோமாலியாவில் உள்ள Bay மாகாணத்தில் மட்டுமே இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

இதுமட்டுமில்லாமல், கடந்த சில வாரங்களில் மட்டும் ஆயிரக்கணக்கான மக்கள் உணவு மற்றும் தண்ணீருக்காக தலைநகரான Mogadishu-வில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

மேலும், சுமார் 7,000-க்கும் அதிகமான மக்கள் பஞ்சம் காரணமாக இடம்பெயர்ந்து சென்றுள்ளனர்.

சோமாலியால் கடும் வறட்சி நிலவுவதால் நாடு முழுவதும் பஞ்சத்திற்கான அவசர நிலையை கடந்த செவ்வாய்க்கிழமை அன்று பிரதமர் அறிவித்தார்.

சோமாலியாவில் கடும் பஞ்சம் நிலவுவதால் சுமார் 50 லட்சம் மக்களுக்கு அவசர உதவிகளை அளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக ஐ.நா சபை அறிவித்துள்ளது.

மேலும், கடந்த பெப்ரவரி மாதம் சோமாலியா நாட்டிற்கு சுமார் 3.6 பில்லியன் டொலர் நிதியுதவி அளிக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் ஐ.நா சபை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தீப்பற்றி எரிந்த வீடு: தாய் உள்பட 4 குழந்தைகள் உடல் கருகி பலி..!!
Next post கள்ளகாதல் விவகாரம்! கணவனை கொன்று சடலத்தை சமையலறையில் வைத்திருந்த மனைவி..!!